சகரியா 8:10
இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.
Tamil Indian Revised Version
இந்நாட்களுக்கு முன்னே மனிதனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கடியினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனிதர்களையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.
Tamil Easy Reading Version
அந்த நேரத்துக்கு முன்பு, கூலிக்கு வேலை ஆட்களையும், வாடகைக்கு மிருகங்களையும் அமர்த்த மனிதர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. ஜனங்களுக்கு வந்து போவது பாதுகாப்பானதாக இல்லை. அவர்களுக்கு எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை இல்லாமல் இருந்தது. நான் ஒவ்வொருவரையும் தன் அயலாருக்கு எதிராக மாற்றியிருக்கிறேன்.
Thiru Viviliam
ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை; போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.
King James Version (KJV)
For before these days there was no hire for man, nor any hire for beast; neither was there any peace to him that went out or came in because of the affliction: for I set all men every one against his neighbour.
American Standard Version (ASV)
For before those days there was no hire for man, nor any hire for beast; neither was there any peace to him that went out or came in, because of the adversary: for I set all men every one against his neighbor.
Bible in Basic English (BBE)
For before those days there was no payment for a man’s work, or for the use of a beast, and there was no peace for him who went out or him who came in, because of the attacker: for I had every man turned against his neighbour.
Darby English Bible (DBY)
For before those days there was no hire for man, nor any hire for beast; and there was no peace for him that went out or that came in, because of the distress: for I let loose all men, every one against his neighbour.
World English Bible (WEB)
For before those days there was no wages for man, nor any wages for an animal; neither was there any peace to him who went out or came in, because of the adversary. For I set all men everyone against his neighbor.
Young’s Literal Translation (YLT)
For, before those days there hath been no hiring of man, Yea, a hiring of beasts there is none; And to him who is going out, And to him who is coming in, There is no peace because of the adversary, And I send all men — each against his neighbour.
சகரியா Zechariah 8:10
இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.
For before these days there was no hire for man, nor any hire for beast; neither was there any peace to him that went out or came in because of the affliction: for I set all men every one against his neighbour.
| כִּ֗י | kî | kee | |
| לִפְנֵי֙ | lipnēy | leef-NAY | |
| הַיָּמִ֣ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| הָהֵ֔ם | hāhēm | ha-HAME | |
| שְׂכַ֤ר | śĕkar | seh-HAHR | |
| הָֽאָדָם֙ | hāʾādām | ha-ah-DAHM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| נִֽהְיָ֔ה | nihĕyâ | nee-heh-YA | |
| וּשְׂכַ֥ר | ûśĕkar | oo-seh-HAHR | |
| הַבְּהֵמָ֖ה | habbĕhēmâ | ha-beh-hay-MA | |
| אֵינֶ֑נָּה | ʾênennâ | ay-NEH-na | |
| וְלַיּוֹצֵ֨א | wĕlayyôṣēʾ | veh-la-yoh-TSAY | |
| וְלַבָּ֤א | wĕlabbāʾ | veh-la-BA | |
| אֵין | ʾên | ane | |
| שָׁלוֹם֙ | šālôm | sha-LOME | |
| מִן | min | meen | |
| הַצָּ֔ר | haṣṣār | ha-TSAHR | |
| וַאֲשַׁלַּ֥ח | waʾăšallaḥ | va-uh-sha-LAHK | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| בְּרֵעֵֽהוּ׃ | bĕrēʿēhû | beh-ray-ay-HOO |
Cross Reference
ஆகாய் 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
ஆமோஸ் 9:4
அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
ஏசாயா 19:2
சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.
மத்தேயு 10:34
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
ஆகாய் 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
எரேமியா 16:16
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.
2 நாளாகமம் 15:5
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
நியாயாதிபதிகள் 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.
நியாயாதிபதிகள் 5:6
ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.
Tags இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்
Zechariah 8:10 in Tamil Concordance Zechariah 8:10 in Tamil Interlinear Zechariah 8:10 in Tamil Image