எரேமியா 13

fullscreen1 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

fullscreen2 நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

fullscreen3 இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: அவர்

fullscreen4 நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.

fullscreen5 நான் போய் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்திலே ஒளித்துவைத்தேன்.

fullscreen6 அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

fullscreen7 அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.

fullscreen8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

fullscreen9 இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

fullscreen10 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen11 கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen12 சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

fullscreen13 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,

fullscreen14 பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

fullscreen15 நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.

fullscreen16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

fullscreen17 நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

fullscreen18 நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.

fullscreen19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.

fullscreen20 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?

fullscreen21 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?

fullscreen22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.

fullscreen23 எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.

fullscreen24 ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.

fullscreen25 என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen26 உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.

fullscreen27 உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

Cross Reference

1 Peter 4:4
ସହେି ଅବିଶ୍ବାସୀମାନେ ଆଶ୍ଚର୍ୟ୍ଯ ହେଉଛନ୍ତି ଯେ ବର୍ତ୍ତମାନ ତୁମ୍ଭେ ସମାନଙ୍କେ ଭଳି ହିଂସ୍ରକ ଓ ଧ୍ବଂସାକରୀ କାମମାନ କରୁ ନାହଁ।

Hosea 8:12
ଏପରିକି ଆମ୍ଭେ ଇଫ୍ରଯିମ ପାଇଁ 10,000 ନିଯମ ଲେଖିଲେ ମଧ୍ଯ ସେ ସଗେୁଡିକ ଅଜଣା ଦ୍ରବ୍ଯ ପରି ବିବଚେନା କରିବ।

Hebrews 5:11
ଏ ବିଷୟ ରେ ଆମ୍ଭର ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଅନକେ କଥା କହିବା ପାଇଁ ଅଛି। କିନ୍ତୁ ଯେ ହତେୁ ତୁମ୍ଭମାନେେ ଅବୁଝା ହେଉଛ, ଏହାକୁ ବୁଝାଇବା କଷ୍ଟକର।

1 Corinthians 2:14
ଯେଉଁଲୋକ ଆଧ୍ଯାତ୍ମିକ ନୁହେଁ, ସେ ପରମେଶ୍ବରଙ୍କ ଆତ୍ମିକ ସତ୍ଯଗୁଡ଼ିକୁ ଗ୍ରହଣ କରେ ନାହିଁ। ସେ ଏହିସବୁ ବିଷୟଗୁଡ଼ିକୁ ମୁର୍ଖାମୀ ବୋଲି ଭାବେ। ସେ ଆତ୍ମାର ସତ୍ଯଗୁଡ଼ିକୁ ବୁଝିପା ରେ ନାହିଁ, କାରଣ ସଗେୁଡ଼ିକୁ କବଳେ ଆଧ୍ଯାତ୍ମିକ ଭାବରେ ବିଚାର କରି ହବେ।

1 Corinthians 1:23
କିନ୍ତୁ ଆମ୍ଭେ ପ୍ରଚାର କରୁଛୁ : ଖ୍ରୀଷ୍ଟ କୃଶ ରେ ମୃତ୍ଯୁ ବରଣ କଲେ। ଏକଥା ଯିହୂଦୀମାନଙ୍କ ଲାଗି ବାଧାଜନକ ଓ ଅଣଯିହୂଦୀମାନଙ୍କ ଲାଗି ମୂର୍ଖତା ଅଟେ।

1 Corinthians 1:18
ଯେଉଁମାନେ ନଷ୍ଟ ହାଇେ ଯାଇଛନ୍ତି, ସମାନଙ୍କେ ଲାଗି କୃଶର ବାର୍ତ୍ତା ସଂପୂର୍ଣ୍ଣ ମୂର୍ଖତା ଅଟେ। କିନ୍ତୁ ଆମ୍ଭେ ଯେଉଁମାନେ ଉଦ୍ଧାର ପାଇଛୁ, ଆମ୍ଭପ୍ରତି ଏହା ପରମେଶ୍ବରଙ୍କ ଶକ୍ତି ସ୍ବରୂପ।

Acts 10:17
ପିତର ଯେଉଁ ଦୃଶ୍ଯ ଦେଖିଥିଲେ, ତା'ର ଅର୍ଥ ବିଷୟ ରେ ଚ଼ିନ୍ତା କରି ହତବୁଦ୍ଧି ହାଇେ ପଡ଼ିଲେ। ଏହି ସମୟରେ କର୍ଣ୍ଣୀଲିୟଙ୍କ ଯେଉଁ ଲୋକମାନେ ଶିମାନଙ୍କେର ଘର ଖାଜେୁଥିଲେ, ସମାନେେ ଆସି ଫାଟକ ନିକଟରେ ଠିଆ ହାଇେଥିଲେ।

Acts 2:12
ସମାନେେ ସମସ୍ତେ ଆଶ୍ଚର୍ୟ୍ଯ ଓ ବିଭ୍ରାନ୍ତ ହାଇେ ପଡ଼ିଲେ। ସମାନେେ ପରସ୍ପର ଭିତ ରେ ପଚ଼ାରା ଉଚ଼ରା ହେଲେ, ଏ ସବୁ କ'ଣ ହେଉଛି?

John 7:35
ଯିହୂଦୀମାନେ ପରସ୍ପର କୁହାକୁହି ହେଲେ, ଏ ଲୋକ ଏପରି କେଉଁଠାକୁ ୟିବ ଯେ, ଆମ୍ଭେ ତାହାକୁ ପାଇବା ନାହିଁ। ସେ କ'ଣ ଗ୍ରୀକ୍ ନଗରଗୁଡିକୁ ୟିବ, ଯେଉଁଠା ରେ ଆମ୍ଭ ଲୋକମାନେ ରୁହନ୍ତି? ସେ ସଠାେରେ ଗ୍ରୀକ୍ ଲୋକମାନଙ୍କୁ ଶିକ୍ଷା ଦବେ କି?

John 6:60
ଯୀଶୁଙ୍କର ଶିଷ୍ଯମାନେ ଏହି ସବୁ କଥା ଶୁଣିଲେ। ସମାନଙ୍କେ ଭିତରୁ ଅନକେ କହିଲେ, ଏ ଉପଦେଶ ଗ୍ରହଣ କରିବା କଷ୍ଟକର। ଏହି ଉପଦେଶ କିଏ ଗ୍ରହଣ କରିପାରିବ?

Mark 10:24
ଯୀଶୁଙ୍କ କଥା ଶୁଣି ଶିଷ୍ଯମାନେ ଆଶ୍ଚର୍ୟ୍ଯ ହାଇଗେଲେ, କିନ୍ତୁ ଯୀଶୁ ସମାନଙ୍କେୁ ପୁଣି କହିଲେ, ହେ ମାରେ ପିଲାମାନେ, ପରମେଶ୍ବରଙ୍କ ରାଜ୍ଯ ରେ ପ୍ରବେଶ କରିବା ପ୍ରକୃତ ରେ କଡେେ କଠିନ।

Mark 9:10
ତେଣୁ ଶିଷ୍ଯମାନେ ଯୀଶୁଙ୍କ କଥା ମାନିଲେ ଓ ସମାନେେ ଯାହା ଦେଖିଲେ ତାହା କାହାରି ଆଗ ରେ ପ୍ରକାଶ କଲେ ନାହିଁ। କିନ୍ତୁ ସମାନେେ କଥାବାର୍ତ୍ତା କରୁଥିଲେ ଯେ ମୃତ୍ଯୁରୁ ପୁନରୁଥିତ ହବୋର ଅର୍ଥ କ'ଣ?

Matthew 19:23
ତାପରେ ଯୀଶୁ ଶିଷ୍ଯମାନଙ୍କୁ କହିଲେ, ମୁଁ ତୁମ୍ଭକୁ ସତ୍ଯ କହୁଛି। ଜଣେ ଧନୀଲୋକ ନିମନ୍ତେ ସ୍ବର୍ଗରାଜ୍ଯ ରେ ପ୍ରବେଶ କରିବା ଅତ୍ଯନ୍ତ କଷ୍ଟକର ବିଷୟ।