சங்கீதம் 145

fullscreen1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

fullscreen2 நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

fullscreen3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.

fullscreen4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

fullscreen5 உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.

fullscreen6 ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.

fullscreen7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.

fullscreen8 கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

fullscreen9 கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.

fullscreen10 கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

fullscreen11 மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;

fullscreen12 உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக்குறித்துப் பேசுவார்கள்.

fullscreen13 உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.

fullscreen14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

fullscreen15 எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

fullscreen16 நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

fullscreen17 கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

fullscreen18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

fullscreen19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

fullscreen20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

fullscreen21 என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

Tamil Indian Revised Version
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)

Tamil Easy Reading Version
உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள். படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.

Thiru Viviliam
⁽சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;␢ படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி␢ அமைதியாயிருங்கள். (சேலா)⁾

சங்கீதம் 4:3சங்கீதம் 4சங்கீதம் 4:5

King James Version (KJV)
Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. Selah.

American Standard Version (ASV)
Stand in awe, and sin not: Commune with your own heart upon your bed, and be still. Selah

Bible in Basic English (BBE)
Let there be fear in your hearts, and do no sin; have bitter feelings on your bed, but make no sound. (Selah.)

Darby English Bible (DBY)
Be moved with anger, and sin not; meditate in your own hearts upon your bed, and be still. Selah.

Webster’s Bible (WBT)
But know that the LORD hath set apart him that is godly for himself: the LORD will hear when I call to him.

World English Bible (WEB)
Stand in awe, and don’t sin. Search your own heart on your bed, and be still. Selah.

Young’s Literal Translation (YLT)
`Tremble ye, and do not sin;’ Say ye `thus’ in your heart on your bed, And be ye silent. Selah.

சங்கீதம் Psalm 4:4
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
Stand in awe, and sin not: commune with your own heart upon your bed, and be still. Selah.

Stand
in
awe,
רִגְז֗וּrigzûreeɡ-ZOO
and
sin
וְֽאַלwĕʾalVEH-al
not:
תֶּ֫חֱטָ֥אוּteḥĕṭāʾûTEH-hay-TA-oo
commune
אִמְר֣וּʾimrûeem-ROO
heart
own
your
with
בִ֭לְבַבְכֶםbilbabkemVEEL-vahv-hem
upon
עַֽלʿalal
your
bed,
מִשְׁכַּבְכֶ֗םmiškabkemmeesh-kahv-HEM
and
be
still.
וְדֹ֣מּוּwĕdōmmûveh-DOH-moo
Selah.
סֶֽלָה׃selâSEH-la