Exodus 9:31
அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
Deuteronomy 8:8அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச் செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்;
Jeremiah 41:8ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
Joel 1:11பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.