சங்கீதம் 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
Tamil Indian Revised Version
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
Tamil Easy Reading Version
என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன். உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.
Thiru Viviliam
⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾
King James Version (KJV)
I delight to do thy will, O my God: yea, thy law is within my heart.
American Standard Version (ASV)
I delight to do thy will, O my God; Yea, thy law is within my heart.
Bible in Basic English (BBE)
My delight is to do your pleasure, O my God; truly, your law is in my heart.
Darby English Bible (DBY)
To do thy good pleasure, my God, is my delight, and thy law is within my heart.
Webster’s Bible (WBT)
Then said I, Lo, I come: in the volume of the book it is written of me,
World English Bible (WEB)
I delight to do your will, my God. Yes, your law is within my heart.”
Young’s Literal Translation (YLT)
To do Thy pleasure, my God, I have delighted, And Thy law `is’ within my heart.
சங்கீதம் Psalm 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
I delight to do thy will, O my God: yea, thy law is within my heart.
| לַֽעֲשֽׂוֹת | laʿăśôt | LA-uh-SOTE | |
| רְצוֹנְךָ֣ | rĕṣônĕkā | reh-tsoh-neh-HA | |
| אֱלֹהַ֣י | ʾĕlōhay | ay-loh-HAI | |
| חָפָ֑צְתִּי | ḥāpāṣĕttî | ha-FA-tseh-tee | |
| וְ֝ת֥וֹרָתְךָ֗ | wĕtôrotkā | VEH-TOH-rote-HA | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| מֵעָֽי׃ | mēʿāy | may-AI |
Cross Reference
யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ரோமர் 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
எரேமியா 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
சங்கீதம் 119:47
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
சங்கீதம் 119:24
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
சங்கீதம் 119:16
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
சங்கீதம் 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
2 கொரிந்தியர் 3:3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 112:1
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tags என் தேவனே உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன் உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்
Psalm 40:8 in Tamil Concordance Psalm 40:8 in Tamil Interlinear Psalm 40:8 in Tamil Image