1 ⁽‛நான் என் நாவினால் பாவம்␢ செய்யாதவண்ணம்␢ என் நடைமுறைகளைக்␢ காத்துக்கொள்வேன்;␢ பொல்லார் என்முன் நிற்கும் வரையில்,␢ என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக்␢ காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன்.⁾

2 ⁽நான் ஊமையைப்போல்␢ பேசாது இருந்தேன்;␢ நலமானதைக்கூடப் பேசாமல்␢ அமைதியாய் இருந்தேன்;␢ என் வேதனையோ பெருகிற்று.⁾

3 ⁽என் உள்ளம் என்னுள்␢ எரியத் தொடங்கிற்று;␢ நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது␢ நெருப்பு மூண்டது;␢ அப்பொழுது என் நா பேசியதாவது;⁾

4 ⁽‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும்␢ என் வாழ்நாளின் அளவு பற்றியும்␢ எனக்கு அறிவுறுத்தும்.␢ அப்போது, நான் எத்துணை நிலையற்றவன்␢ என உணர்ந்து கொள்வேன்.⁾

5 ⁽என் வாழ்நாளைச்␢ சில விரற்கடை அளவாக்கினீர்;␢ என் ஆயுட்காலம் உமது பார்வையில்␢ ஒன்றுமில்லை;␢ உண்மையில், மானிடர் அனைவரும்␢ தம் உச்ச நிலையிலும்␢ நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)⁾

6 ⁽அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்;␢ அவர்கள் வருந்தி உழைப்பது வீண்;␢ அவர்கள் சேமித்து வைக்கின்றனர்;␢ ஆனால் அதை அனுபவிப்பது␢ யாரென அறியார்.⁾

7 ⁽என் தலைவரே, நான் இப்போது␢ எதை எதிர்பார்க்கட்டும்?␢ நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.⁾

8 ⁽என் குற்றங்கள் அனைத்தினின்றும்␢ என்னை விடுவித்தருளும்;␢ மதிகேடரின் பழிப்புரைக்கு␢ என்னை ஆளாக்காதேயும்.⁾

9 ⁽நான் ஊமைபோல் ஆனேன்;␢ வாய் திறவேன்;␢ ஏனெனில், எனக்கு␢ இந்நிலைமையை வருவித்தவர் நீரே.⁾

10 ⁽நீர் தந்த வாதையை␢ என்னிடமிருந்து நீக்கிவிடும்;␢ உமது கை அடித்த அடிகளால்␢ நான் அழிவுக்கு ஆளானேன்.⁾

11 ⁽குற்றத்தின் பொருட்டு␢ நீர் மனிதரைத் தண்டிக்கும்போது,␢ பூச்சி அரிப்பதுபோல்,␢ அவர்களுக்கு விருப்பமானவற்றை␢ நீர் அழிக்கின்றீர்;␢ உண்மையில் மானிடர் அனைவரும்␢ நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)⁾

12 ⁽ஆண்டவரே!␢ என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;␢ என்னுடைய மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் கண்ணீரைக் கண்டும்␢ மௌனமாய் இராதேயும்;␢ ஏனெனில், உமது முன்னிலையில்␢ நான் ஓர் அன்னியன்;␢ என் மூதாதையர் போன்று␢ நான் ஒரு நாடோடி!⁾

13 ⁽நான் பிரிந்து மறையும் முன்பு␢ சற்றே மகிழ்ச்சி அடையும்படி,␢ உம் கொடிய பார்வையை␢ என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.⁾

Psalm 39 ERV IRV TRV