ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பத்து.
எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.
இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.
கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
were | כָּל | kāl | kahl |
All the | עָרֵ֥י | ʿārê | ah-RAY |
cities of the | הַגֵּֽרְשֻׁנִּ֖י | haggērĕšunnî | ha-ɡay-reh-shoo-NEE |
Gershonites families their to | לְמִשְׁפְּחֹתָ֑ם | lĕmišpĕḥōtām | leh-meesh-peh-hoh-TAHM |
according thirteen | שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH |
עֶשְׂרֵ֥ה | ʿeśrē | es-RAY | |
cities | עִ֖יר | ʿîr | eer |
with their suburbs. | וּמִגְרְשֵׁיהֶֽן׃ | ûmigrĕšêhen | oo-meeɡ-reh-shay-HEN |