யோபு 7:5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
Tamil Indian Revised Version
என் உடல் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
Tamil Easy Reading Version
என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன. என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன.
Thiru Viviliam
⁽புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின␢ என் உடலை; வெடித்தது என் தோல்;␢ வடிந்தது சீழ்.⁾
King James Version (KJV)
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and become loathsome.
American Standard Version (ASV)
My flesh is clothed with worms and clods of dust; My skin closeth up, and breaketh out afresh.
Bible in Basic English (BBE)
My flesh is covered with worms and dust; my skin gets hard and then is cracked again.
Darby English Bible (DBY)
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and suppurates.
Webster’s Bible (WBT)
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken and become lothsome.
World English Bible (WEB)
My flesh is clothed with worms and clods of dust. My skin closes up, and breaks out afresh.
Young’s Literal Translation (YLT)
Clothed hath been my flesh `with’ worms, And a clod of dust, My skin hath been shrivelled and is loathsome,
யோபு Job 7:5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and become loathsome.
| לָ֘בַ֤שׁ | lābaš | LA-VAHSH | |
| בְּשָׂרִ֣י | bĕśārî | beh-sa-REE | |
| רִ֭מָּה | rimmâ | REE-ma | |
| וְג֣יּשׁ | wĕgyyš | VEɡ-ysh | |
| עָפָ֑ר | ʿāpār | ah-FAHR | |
| עוֹרִ֥י | ʿôrî | oh-REE | |
| רָ֝גַ֗ע | rāgaʿ | RA-ɡA | |
| וַיִּמָּאֵֽס׃ | wayyimmāʾēs | va-yee-ma-ASE |
Cross Reference
ஏசாயா 14:11
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.
யோபு 17:14
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
யோபு 2:7
அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
எசேக்கியேல் 20:43
அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள்.
ஏசாயா 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.
ஏசாயா 1:6
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
சங்கீதம் 38:5
என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
யோபு 30:18
நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
யோபு 24:20
அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
யோபு 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
யோபு 9:31
நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
Tags என் மாம்சம் பூச்சிகளினாலும் அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று
Job 7:5 in Tamil Concordance Job 7:5 in Tamil Interlinear Job 7:5 in Tamil Image