Exodus 9:10
அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
Exodus 9:9அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.
Deuteronomy 28:27நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
Habakkuk 3:5அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
Psalm 38:7என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.