1ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.And thou shalt make an altar of shittim wood, five cubits long, and five cubits broad; the altar shall be foursquare: and the height thereof shall be three cubits.
2அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.And thou shalt make the horns of it upon the four corners thereof: his horns shall be of the same: and thou shalt overlay it with brass.
3அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.And thou shalt make his pans to receive his ashes, and his shovels, and his basins, and his fleshhooks, and his firepans: all the vessels thereof thou shalt make of brass.
4வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,And thou shalt make for it a grate of network of brass; and upon the net shalt thou make four brazen rings in the four corners thereof.
5அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.And thou shalt put it under the compass of the altar beneath, that the net may be even to the midst of the altar.
6பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.
7பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.And the staves shall be put into the rings, and the staves shall be upon the two sides of the altar, to bear it.
8அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும். மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்.Hollow with boards shalt thou make it: as it was showed thee in the mount, so shall they make it.
9வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.And thou shalt make the court of the tabernacle: for the south side southward there shall be hangings for the court of fine twined linen of an hundred cubits long for one side:
10அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.And the twenty pillars thereof and their twenty sockets shall be of brass; the hooks of the pillars and their fillets shall be of silver.
11அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.And likewise for the north side in length there shall be hangings of an hundred cubits long, and his twenty pillars and their twenty sockets of brass; the hooks of the pillars and their fillets of silver.
12பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.And for the breadth of the court on the west side shall be hangings of fifty cubits: their pillars ten, and their sockets ten.
13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும்.And the breadth of the court on the east side eastward shall be fifty cubits.
14அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.The hangings of one side of the gate shall be fifteen cubits: their pillars three, and their sockets three.
15மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.And on the other side shall be hangings fifteen cubits: their pillars three, and their sockets three.
16பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.And for the gate of the court shall be an hanging of twenty cubits, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework: and their pillars shall be four, and their sockets four.
17சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.
18பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.The length of the court shall be an hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits of fine twined linen, and their sockets of brass.
19வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.All the vessels of the tabernacle in all the service thereof, and all the pins thereof, and all the pins of the court, shall be of brass.
20குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.And thou shalt command the children of Israel, that they bring thee pure oil olive beaten for the light, to cause the lamp to burn always.
21ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.In the tabernacle of the congregation without the vail, which is before the testimony, Aaron and his sons shall order it from evening to morning before the LORD: it shall be a statute for ever unto their generations on the behalf of the children of Israel.
1Ainthu mula neelamum ainthu mula akalamumaaka seeththim maraththaal palipeedaththaiyum unndupannnuvaayaaka; athu sathuramum moontu mula uyaramumaayiruppathaaka.And thou shalt make an altar of shittim wood, five cubits long, and five cubits broad; the altar shall be foursquare: and the height thereof shall be three cubits.
2Athin naalu moolaikalilum naalu kompukalai unndaakkuvaayaaka; athin kompukal athanotae aekamaay irukkavaenndum; athai vennkalath thakattal moodavaenndum.And thou shalt make the horns of it upon the four corners thereof: his horns shall be of the same: and thou shalt overlay it with brass.
3Athin saampalai edukkaththakka sattikalaiyum karanntikalaiyum kinnnnikalaiyum multhuradukalaiyum neruppuchchattikalaiyum unndaakkuvaayaaka; athin pannimuttukalaiyellaam vennkalaththaal pannnuvaayaaka.And thou shalt make his pans to receive his ashes, and his shovels, and his basins, and his fleshhooks, and his firepans: all the vessels thereof thou shalt make of brass.
4Valaippinnal ponta oru vennkalach sallataiyaip pannnni, anthach sallataiyin naalu moolaikalilum naalu vennkala valaiyangalai unndaakki,And thou shalt make for it a grate of network of brass; and upon the net shalt thou make four brazen rings in the four corners thereof.
5Anthach sallatai palipeedaththin paathiyuyaraththil irukkumpati athaith thaalap palipeedaththin suttataippukkuk geelaaka vaippaayaaka.And thou shalt put it under the compass of the altar beneath, that the net may be even to the midst of the altar.
6Palipeedaththukkuch seeththim marathΤாl thanndukalaiyum pannnni, avaikalai vennkalaththakattal mooduvaayaaka.And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.
7Palipeedaththaich sumakkaththakkathaaka anthath thanndukal athin iranndu pakkangalilum valaiyangalilae paaychchappattirukkavaenndum.And the staves shall be put into the rings, and the staves shall be upon the two sides of the altar, to bear it.
8Athai ul velivittup palakaikalinaalae pannnavaenndum. Malaiyil unakkuk kaannpikkappattapatiyae athaip pannnakkadavarkal.Hollow with boards shalt thou make it: as it was showed thee in the mount, so shall they make it.
9Vaasasthalaththukkup piraakaaraththaiyum unndupannnuvaayaaka; therkae thenthisaikku ethiraana piraakaaraththukkuth thiriththa melliya panjunoolaal seyyappatta nooraுmula neelamaana thonguthiraikal irukkavaenndum.And thou shalt make the court of the tabernacle: for the south side southward there shall be hangings for the court of fine twined linen of an hundred cubits long for one side:
10Avaikalukku vennkalaththinaalae irupathu thoonnkalum, irupathu paathangalum irukkavaenndum; thoonnkalin kokkikalum avaikalin poonnkalum velliyinaal seyyappadavaenndum.And the twenty pillars thereof and their twenty sockets shall be of brass; the hooks of the pillars and their fillets shall be of silver.
11Appatiyae vadapakkaththin neelaththirkum nooraுmula neelamaana thonguthiraikal irukkavaenndum; avaikalukku irupathu thoonnkalum, avaikalukku irupathu paathangalum vennkalamaayirukka vaenndum; thoonnkalin kokkikalum poonnkalum velliyinaal seyyappadavaenndum.And likewise for the north side in length there shall be hangings of an hundred cubits long, and his twenty pillars and their twenty sockets of brass; the hooks of the pillars and their fillets of silver.
12Piraakaaraththin maerpakkamaana akalaththirku aimpathu mula neelamaana thonguthiraikal irukkavaenndum; avaikalukkup paththuth thoonnkalum, avaikalukkup paththup paathangalum irukkavaenndum.And for the breadth of the court on the west side shall be hangings of fifty cubits: their pillars ten, and their sockets ten.
13Sooriyan uthikkira thisaiyaakiya geelppakkaththin piraakaaram aimpathumula akalamaayirukkavaenndum.And the breadth of the court on the east side eastward shall be fifty cubits.
14Angae oru puraththirkup pathinainthu mula neelamaana thongu thiraikalum, avaikalukku moontu thoonnkalum, avaikalukku moontu paathangalum irukkavaenndum.The hangings of one side of the gate shall be fifteen cubits: their pillars three, and their sockets three.
15Maraுpuraththukkup pathinainthu mula neelamaana thongu thiraikalum, avaikalukku moontu thoonnkalum, avaikalukku moontu paathangalum irukkavaenndum.And on the other side shall be hangings fifteen cubits: their pillars three, and their sockets three.
16Piraakaaraththin vaasalukku ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum siththirath thaiyalvaelaiyaaych seyyappatta irupathumula neelamaana oru thonguthiraiyum atharku naalu thoonnkalum avaikalukku naalu paathangalum irukkavaenndum.And for the gate of the court shall be an hanging of twenty cubits, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework: and their pillars shall be four, and their sockets four.
17Suttaுp piraakaaraththin thoonnkalellaam velliyinaal poonn kattappattirukkavaenndum; avaikalin kokkikal velliyinaalum avaikalin paathangal vennkalaththinaalum seyyappattirukka vaenndum.All the pillars round about the court shall be filleted with silver; their hooks shall be of silver, and their sockets of brass.
18Piraakaaraththin neelam nooraுmulamum, irupuraththu akalam aimpathu aimpathu mulamum, uyaram ainthu mulamumaayiruppathaaka; athin thongalkal thiriththa melliya panjunoolinaal seyyappattu, athin thoonnkalin paathangal vennkalamaayirukkavaenndum.The length of the court shall be an hundred cubits, and the breadth fifty every where, and the height five cubits of fine twined linen, and their sockets of brass.
19Vaasasthalaththukkaduththa sakala pannivitaikkuth thaevaiyaana ellaap pannimuttukalum, athin ellaa mulaikalum, piraakaaraththin ellaa mulaikalum vennkalamaayirukkavaenndum.All the vessels of the tabernacle in all the service thereof, and all the pins thereof, and all the pins of the court, shall be of brass.
20Kuththuvilakku eppoluthum erinthukonntirukkumpati itiththup pilintha thelivaana oliva ennnneyai unnidaththil konnduvarumpati Israel puththirarukkuk kattalaiyiduvaayaaka.And thou shalt command the children of Israel, that they bring thee pure oil olive beaten for the light, to cause the lamp to burn always.
21Aasarippuk koodaaraththil saatchi sannithikku munnirukkum thiraichchaீlaikku velippuramaaka aaronum avan kumaararum saayangaalam thodangi vitiyarkaalammattum karththarutaiya sannithaanaththil antha vilakkai eriyavaikkakkadavarkal; ithu Israel puththirarukku thalaimurai thalaimuraiyaaka niththiya kattalaiyaayirukkakkadavathu.In the tabernacle of the congregation without the vail, which is before the testimony, Aaron and his sons shall order it from evening to morning before the LORD: it shall be a statute for ever unto their generations on the behalf of the children of Israel.