புலம்பல் 1:19
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.
Tamil Indian Revised Version
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
நான் எனது நேசர்களை கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள். எனது ஆசாரியர்களும், முதியவர்களும் இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர். அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽என் காதலர்களை அழைத்தேன்;␢ அவர்களோ என்னை ஏமாற்றினர்;␢ என் குருக்களும் பெரியோரும்␢ தங்கள் உயிரைக் காத்திட␢ உணவு தேடுகையில்,␢ நகரில் பசியால் மாண்டனர்.⁾
King James Version (KJV)
I called for my lovers, but they deceived me: my priests and mine elders gave up the ghost in the city, while they sought their meat to relieve their souls.
American Standard Version (ASV)
I called for my lovers, `but’ they deceived me: My priests and mine elders gave up the ghost in the city, While they sought them food to refresh their souls.
Bible in Basic English (BBE)
I sent for my lovers, but they were false to me: my priests and my responsible men were breathing their last breath in the town, while they were looking for food to give them new life.
Darby English Bible (DBY)
I called for my lovers, they have deceived me; my priests and mine elders have expired in the city, while they sought them food to revive their soul.
World English Bible (WEB)
I called for my lovers, [but] they deceived me: My priests and my elders gave up the spirit in the city, While they sought them food to refresh their souls.
Young’s Literal Translation (YLT)
I called for my lovers, they — they have deceived me, My priests and my elders in the city have expired; When they have sought food for themselves, Then they give back their soul.
புலம்பல் Lamentations 1:19
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.
I called for my lovers, but they deceived me: my priests and mine elders gave up the ghost in the city, while they sought their meat to relieve their souls.
| קָרָ֤אתִי | qārāʾtî | ka-RA-tee | |
| לַֽמְאַהֲבַי֙ | lamʾahăbay | lahm-ah-huh-VA | |
| הֵ֣מָּה | hēmmâ | HAY-ma | |
| רִמּ֔וּנִי | rimmûnî | REE-moo-nee | |
| כֹּהֲנַ֥י | kōhănay | koh-huh-NAI | |
| וּזְקֵנַ֖י | ûzĕqēnay | oo-zeh-kay-NAI | |
| בָּעִ֣יר | bāʿîr | ba-EER | |
| גָּוָ֑עוּ | gāwāʿû | ɡa-VA-oo | |
| כִּֽי | kî | kee | |
| בִקְשׁ֥וּ | biqšû | veek-SHOO | |
| אֹ֙כֶל֙ | ʾōkel | OH-HEL | |
| לָ֔מוֹ | lāmô | LA-moh | |
| וְיָשִׁ֖יבוּ | wĕyāšîbû | veh-ya-SHEE-voo | |
| אֶת | ʾet | et | |
| נַפְשָֽׁם׃ | napšām | nahf-SHAHM |
Cross Reference
புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
புலம்பல் 1:11
அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.
புலம்பல் 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
யோபு 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.
புலம்பல் 5:12
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
புலம்பல் 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
புலம்பல் 4:7
அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப் பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.
எரேமியா 37:7
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
எரேமியா 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
எரேமியா 27:13
பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?
எரேமியா 23:11
தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 14:15
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
எரேமியா 2:28
நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
Tags என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன் அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள் என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்
Lamentations 1:19 in Tamil Concordance Lamentations 1:19 in Tamil Interlinear Lamentations 1:19 in Tamil Image