நெகேமியா 13:17
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
Tamil Indian Revised Version
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செயலைச் செய்கிறதென்ன?
Tamil Easy Reading Version
யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வு நாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள்.
Thiru Viviliam
எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறியது: “எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?
King James Version (KJV)
Then I contended with the nobles of Judah, and said unto them, What evil thing is this that ye do, and profane the sabbath day?
American Standard Version (ASV)
Then I contended with the nobles of Judah, and said unto them, What evil thing is this that ye do, and profane the sabbath day?
Bible in Basic English (BBE)
Then I made protests to the chiefs of Judah, and said to them, What is this evil which you are doing, not keeping the Sabbath day holy?
Darby English Bible (DBY)
And I contended with the nobles of Judah, and said to them, What evil thing is this which ye do, profaning the sabbath day?
Webster’s Bible (WBT)
Then I contended with the nobles of Judah, and said to them, What evil thing is this that ye do, and profane the sabbath day?
World English Bible (WEB)
Then I contended with the nobles of Judah, and said to them, What evil thing is this that you do, and profane the Sabbath day?
Young’s Literal Translation (YLT)
And I strive with the freemen of Judah, and say to them, `What `is’ this evil thing that ye are doing, and polluting the sabbath-day?
நெகேமியா Nehemiah 13:17
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
Then I contended with the nobles of Judah, and said unto them, What evil thing is this that ye do, and profane the sabbath day?
| וָֽאָרִ֕יבָה | wāʾārîbâ | va-ah-REE-va | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| חֹרֵ֣י | ḥōrê | hoh-RAY | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וָאֹֽמְרָ֣ה | wāʾōmĕrâ | va-oh-meh-RA | |
| לָהֶ֗ם | lāhem | la-HEM | |
| מָֽה | mâ | ma | |
| הַדָּבָ֨ר | haddābār | ha-da-VAHR | |
| הָרָ֤ע | hārāʿ | ha-RA | |
| הַזֶּה֙ | hazzeh | ha-ZEH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אַתֶּ֣ם | ʾattem | ah-TEM | |
| עֹשִׂ֔ים | ʿōśîm | oh-SEEM | |
| וּֽמְחַלְּלִ֖ים | ûmĕḥallĕlîm | oo-meh-ha-leh-LEEM | |
| אֶת | ʾet | et | |
| י֥וֹם | yôm | yome | |
| הַשַּׁבָּֽת׃ | haššabbāt | ha-sha-BAHT |
Cross Reference
நெகேமியா 13:11
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
நெகேமியா 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
மீகா 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
எரேமியா 22:2
தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எரேமியா 13:18
நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
எரேமியா 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
ஏசாயா 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
நீதிமொழிகள் 28:4
வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.
சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
நெகேமியா 5:7
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,
Tags ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன
Nehemiah 13:17 in Tamil Concordance Nehemiah 13:17 in Tamil Interlinear Nehemiah 13:17 in Tamil Image