1 Chronicles 7 in Tamil TRV Compare Thiru Viviliam
1 இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர்.2 தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது.⒫3 உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஐவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர்.4 அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில், அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர்.5 இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர்.6 பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.7 பேலாவின் புதல்வர்: எட்சவோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஐவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமை மிகு வீரர்களாயும் திகழ்தனர். அவர்களுள் வழிமரபு அட்டவணையில் குறிக்கப்படடோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு.⒫8 பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர்.9 அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருநூறு.⒫10 எதியேலின் புதல்வர்: பில்கான்; பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர்.11 எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருநூறு.12 சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள். ஊசிம் அகேரின் புதல்வர்.13 நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்லூம்; இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.14 மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர்.15 குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர்.⒫16 மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம்.17 ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர்.⒫18 கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்; இஸ்கோது, அபியேசர், மக்லா.19 செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம்.20 எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு; அவர் மகன் பெரேது; அவர் மகன் தகாத்து; அவர் மகன் எலயாதா; அவர் மகன் தகாத்து;21 அவர் மகன் சாபாது; அவர் மகன் சுத்தெலாகு; மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.22 அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர்.23 எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில், தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.⒫24 எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.⒫25 எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு; மற்றும் இரசேபு; அவர் மகன் தெலாகு; அவர் மகன் தாகான்;26 அவர் மகன் லாதான்; அவர் மகன் அம்மிகூது; அவர் மகன் எலிசாமா;27 அவர் மகன் நூன்; அவர் மகன் யோசுவா.⒫28 அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே; பெத்தேல், அதன் சிற்றூர்கள்; கீழ்ப்புறத்தில் நாரான்; மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்றூர்கள்; செக்கேம், அதன் சிற்றூர்கள்; அய்யா, அதன் சிற்றூர்கள்.⒫29 மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்றூர்கள்; தானாக்கு, அதன் சிற்றூர்கள்; மெகிதோ, அதன் சிற்றூர்கள்; தோர், அதன் சிற்றூர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர்.30 ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா; அவர்களின் சகோதரி செராகு.⒫31 பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை.32 ஏபேருக்குப் பிறந்தோர்; யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா.⒫33 யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து; இவர்கள் யாப்லேற்றின் புதல்வர்.⒫34 செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம்.35 அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.⒫36 சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா.37 பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா.38 எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா.39 உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா.⒫40 ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.