செப்பனியா 3:9
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மக்களெல்லோரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்களுடைய மொழியை செம்மையான மொழியாக மாறச்செய்வேன்.
Tamil Easy Reading Version
பிறகு, நான், தெளிவாக பேசும்படி பிற நாடுகளிலுள்ள ஜனங்களை மாற்றுவேன். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுவார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை தொழுதுகொள்வார்கள்.
Thiru Viviliam
⁽அக்காலத்தில் நான்␢ மக்களினங்களுக்குத்␢ தூய நாவினை அருள்வேன்;␢ அப்போது அவர்கள் அனைவரும்␢ ஆண்டவரின் பெயரால்␢ மன்றாடி ஒருமனப்பட்டு␢ அவருக்குப் பணிபுரிவார்கள்.⁾
King James Version (KJV)
For then will I turn to the people a pure language, that they may all call upon the name of the LORD, to serve him with one consent.
American Standard Version (ASV)
For then will I turn to the peoples of a pure language, that they may all call upon the name of Jehovah, to serve him with one consent.
Bible in Basic English (BBE)
For then I will give the people a clean language, so that they may all make prayer to the Lord and be his servants with one mind.
Darby English Bible (DBY)
For then will I turn to the peoples a pure language, that they may all call upon the name of Jehovah, to serve him with one consent.
World English Bible (WEB)
For then I will purify the lips of the peoples, that they may all call on the name of Yahweh, to serve him shoulder to shoulder.
Young’s Literal Translation (YLT)
For then do I turn unto peoples a pure lip, To call all of them by the name of Jehovah, To serve Him `with’ one shoulder.
செப்பனியா Zephaniah 3:9
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
For then will I turn to the people a pure language, that they may all call upon the name of the LORD, to serve him with one consent.
| כִּֽי | kî | kee | |
| אָ֛ז | ʾāz | az | |
| אֶהְפֹּ֥ךְ | ʾehpōk | eh-POKE | |
| אֶל | ʾel | el | |
| עַמִּ֖ים | ʿammîm | ah-MEEM | |
| שָׂפָ֣ה | śāpâ | sa-FA | |
| בְרוּרָ֑ה | bĕrûrâ | veh-roo-RA | |
| לִקְרֹ֤א | liqrōʾ | leek-ROH | |
| כֻלָּם֙ | kullām | hoo-LAHM | |
| בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| לְעָבְד֖וֹ | lĕʿobdô | leh-ove-DOH | |
| שְׁכֶ֥ם | šĕkem | sheh-HEM | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Cross Reference
ஏசாயா 19:18
அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.
சங்கீதம் 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
ரோமர் 15:6
பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
ஆபகூக் 2:14
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
ஆதியாகமம் 11:1
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
மத்தேயு 12:35
நல்ல மனுஷன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
சகரியா 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 2:11
அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
செப்பனியா 2:11
கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
எரேமியா 16:19
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
சங்கீதம் 113:3
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
சங்கீதம் 86:9
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
1 இராஜாக்கள் 8:41
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.
சகரியா 14:9
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
Tags அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்
Zephaniah 3:9 in Tamil Concordance Zephaniah 3:9 in Tamil Interlinear Zephaniah 3:9 in Tamil Image