லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
1 Chronicles 24:21ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
1 Chronicles 24:22இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
1 Chronicles 24:23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அமரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
1 Chronicles 24:24ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
1 Chronicles 24:25மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின குமாரரில் சகரியாவும்,
1 Chronicles 24:26மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
1 Chronicles 24:27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
1 Chronicles 24:28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
1 Chronicles 24:29கீசின் புத்திரரில் யெராமியேலும்,
1 Chronicles 24:30மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
1 Chronicles 24:31இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.