Bible

Bible Topic

Finally, Sarah has a baby - இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை

Genesis 21:1-7

Genesis 21:1

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

And the LORD visited Sarah as he had said, and the LORD did unto Sarah as he had spoken.

Genesis 21:2

ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

For Sarah conceived, and bare Abraham a son in his old age, at the set time of which God had spoken to him.

Genesis 21:3

அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

And Abraham called the name of his son that was born unto him, whom Sarah bare to him, Isaac.

Genesis 21:4

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

And Abraham circumcised his son Isaac being eight days old, as God had commanded him.

Genesis 21:5

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

And Abraham was an hundred years old, when his son Isaac was born unto him.

Genesis 21:6

அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.

And Sarah said, God hath made me to laugh, so that all that hear will laugh with me.

Genesis 21:7

சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

And she said, Who would have said unto Abraham, that Sarah should have given children suck? for I have born him a son in his old age.