யாத்திராகமம் 8:16

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் 8:17

அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையிலிருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசமெங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.

யாத்திராகமம் 8:18

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் இருந்தது.

யாத்திராகமம் 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.