சங்கீதம் 72 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾2 ⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾3 ⁽மலைகள் மக்களுக்குச்␢ சமாதானத்தைக் கொடுக்கட்டும்;␢ குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.⁾4 ⁽எளியோரின் மக்களுக்கு␢ அவர் நீதி வழங்குவாராக!␢ ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;␢ பிறரை ஒடுக்குவோரை␢ நொறுக்கி விடுவாராக!⁾5 ⁽கதிரவனும் நிலாவும் உள்ளவரையில்,␢ உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக␢ உமக்கு அஞ்சி நடப்பார்களாக.⁾6 ⁽அவர் புல்வெளியில் பெய்யும்␢ தூறலைப்போல் இருப்பாராக;␢ நிலத்தில் பொழியும் மழையைப் போல்␢ விளங்குவாராக.⁾7 ⁽அவர் காலத்தில்␢ நீதி தழைத்தோங்குவதாக;␢ நிலா உள்ள வரையில்␢ மிகுந்த சமாதானம் நிலவுவதாக.⁾8 ⁽ஒரு கடலிலிருந்து␢ அடுத்த கடல்வரைக்கும்␢ அவர் ஆட்சி செலுத்துவார்;␢ பேராற்றிலிருந்து␢ உலகின் எல்லை வரைக்கும்␢ அவர் அரசாள்வார்.⁾9 ⁽பாலைவெளி வாழ்வோர்␢ அவர்முன் குனிந்து வணங்குவர்;␢ அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.⁾10 ⁽தர்சீசு அரசர்களும்␢ தீவுகளின் அரசர்களும்␢ காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;␢ சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்␢ நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.⁾11 ⁽எல்லா அரசர்களும் அவர்முன்␢ தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;␢ எல்லா இனத்தவரும்␢ அவருக்கு ஊழியம் செய்வார்கள்.⁾12 ⁽தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்␢ திக்கற்ற எளியோரையும்␢ அவர் விடுவிப்பார்.⁾13 ⁽வறியோர்க்கும் ஏழைகட்கும்␢ அவர் இரக்கம் காட்டுவார்;␢ ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.⁾14 ⁽அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்␢ வன்முறையினின்றும் விடுவிப்பார்;␢ அவர்கள் இரத்தம் அவர் பார்வையில்␢ விலைமதிப்பற்றது.⁾15 ⁽அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன்␢ அவருக்குக் கொடுக்கப்படும்;␢ அவருக்காக இடையறாது␢ வேண்டுதல் செய்யப்படுவதாக!␢ அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு␢ நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!⁾16 ⁽நாட்டில் தானியம் மிகுந்திடுக!␢ மலைகளின் உச்சிகளில்␢ பயிர்கள் அசைந்தாடுக!␢ லெபனோனைப்போல்␢ அவை பயன் தருக!␢ வயல்வெளிப் புல்லென␢ நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!⁾17 ⁽அவர் பெயர்␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ கதிரவன் உள்ளவரையில்␢ அவர் பெயர் நிலைப்பதாக!␢ அவர்மூலம் மனிதர்␢ ஆசிபெற விழைவராக!␢ எல்லா நாட்டினரும் அவரை␢ நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!⁾18 ⁽ஆண்டவராகிய கடவுள்,␢ இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!␢ அவர் ஒருவரே␢ வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!⁾19 ⁽மாட்சி பொருந்திய அவரது பெயர்␢ என்றென்றும் புகழப்பெறுவதாக!␢ அவரது மாட்சி␢ உலகெல்லாம் நிறைந்திருப்பதாக!␢ ஆமென், ஆமென்.⁾20 ⁽(ஈசாயின் மகனாகிய தாவீதின்␢ மன்றாட்டுகள் நிறைவுற்றன.)⁾