சங்கீதம் 29 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽இறைவனின் மைந்தரே!␢ மாட்சியையும் வலிமையையும்␢ ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.␢ ஆம்! ஆண்டவருக்கே § உரித்தாக்குங்கள்!⁾2 ⁽ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை␢ அவருக்கு உரித்தாக்குங்கள்;␢ தூய மாட்சி இலங்கும்␢ ஆண்டவரை வழிபடுங்கள்.⁾3 ⁽ஆண்டவரின் குரல்␢ கடல்மேல் ஒலிக்கின்றது;␢ மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்;␢ ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் § வீற்றிருக்கின்றார்.⁾4 ⁽ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது;␢ ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.⁾5 ⁽ஆண்டவரின் குரல்␢ கேதுருமரங்களை முறிக்கின்றது;␢ ஆண்டவர் லெபனோன் கேதுரு␢ மரங்களை முறித்துவிடுகின்றார்.⁾6 ⁽லெபனோனின் மலையைக்␢ கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்;␢ சிரியோன் மலையைக்␢ காட்டெருமைக் கன்றெனக்␢ குதிக்கச் செய்கின்றார்.⁾7 ⁽ஆண்டவரின் குரல்␢ மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;⁾8 ⁽ஆண்டவரின் குரல் பாலைவனத்தை␢ அதிரச் செய்கின்றது;␢ ஆண்டவர் காதேசு பாலைவனத்தை␢ நடுங்கச் செய்கின்றார்.⁾9 ⁽ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை␢ முறித்து விடுகின்றது*;␢ காடுகளை வெறுமை ஆக்குகின்றது;␢ அவரது கோவிலில் உள்ளஅனைவரும்␢ ‛இறைவனுக்கு மாட்சி’ என்று␢ ஆர்ப்பரிக்கின்றனர்.⁾10 ⁽ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது␢ வீற்றிருக்கின்றார்;␢ ஆண்டவர் என்றென்றும்␢ அரசராக வீற்றிருக்கின்றார்.⁾11 ⁽ஆண்டவர் தம் மக்களுக்கு␢ ஆற்றல் அளிப்பாராக!␢ ஆண்டவர் தம் மக்களுக்குச்␢ சமாதானம் அருள்வாராக!␢ ஆண்டவர்தம் மக்களுக்கு␢ ஆசி வழங்குவாராக!⁾