சங்கீதம் 22 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽என் இறைவா, என் இறைவா,␢ ஏன் என்னைக் கைவிட்டீர்?␢ என்னைக் காப்பாற்றாமலும்,␢ நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்␢ ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?⁾2 ⁽என் கடவுளே,␢ நான் பகலில் மன்றாடுகின்றேன்;␢ நீர் பதில் அளிப்பதில்லை,␢ இரவிலும் மன்றாடுகின்றேன்;␢ எனக்கு அமைதி கிடைப்பதில்லை.⁾3 ⁽நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;␢ இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்␢ வீற்றிருக்கின்றீர்;⁾4 ⁽எங்கள் மூதாதையர்␢ உம்மில் நம்பிக்கை வைத்தனர்;␢ அவர்கள் நம்பியதால்␢ நீர் அவர்களை விடுவித்தீர்.⁾5 ⁽உம்மை அவர்கள் வேண்டினார்கள்;␢ விடுவிக்கப்பட்டார்கள்;␢ உம்மை அவர்கள் நம்பினார்கள்;␢ ஏமாற்றமடையவில்லை.⁾6 ⁽நானோ ஒரு புழு, மனிதனில்லை;␢ மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;␢ மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.⁾7 ⁽என்னைப் பார்ப்போர் எல்லாரும்␢ ஏளனம் செய்கின்றனர்;␢ உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,⁾8 ⁽‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!␢ அவர் இவனை மீட்கட்டும்;␢ தாம் அன்பு கூர்ந்த அவனை␢ அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.⁾9 ⁽என்னைக் கருப்பையினின்று␢ வெளிக்கொணர்ந்தவர் நீரே;␢ என் தாயிடம் பால்குடிக்கையிலேயே␢ என்னைப் பாதுகாத்தவரும் நீரே!⁾10 ⁽கருப்பையிலிருந்தே␢ உம்மைச் சார்ந்திருந்தேன்;␢ நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்␢ என் இறைவன் நீரே!⁾11 ⁽என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;␢ ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;␢ மேலும், உதவி செய்வார் யாருமில்லை.⁾12 ⁽காளைகள் பல என்னைச்␢ சூழ்ந்து கொண்டுள்ளன;␢ பாசானின் கொழுத்த எருதுகள்␢ என்னை வளைத்துக் கொண்டன.⁾13 ⁽அவர்கள் என்னை விழுங்கத்␢ தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;␢ இரைதேடிச் சீறி முழங்கும்␢ சிங்கம்போல் பாய்கின்றார்கள்.⁾14 ⁽நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;␢ என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;␢ என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;␢ என் உள்ளுறுப்புகளின் நடுவே␢ உருகிப்போயிற்று.⁾15 ⁽என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;␢ என் நாவு மேலண்ணத்தோடு␢ ஒட்டிக்கொண்டது; என்னைச்␢ சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.⁾16 ⁽தீமை செய்வோரின் கூட்டம்␢ என்னை வளைத்துக் கொண்டது;␢ நாய்கள் என அவர்கள் என்னைச்␢ சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,␢ கால்களையும் துளைத்தார்கள்.⁾17 ⁽என் எலும்புகளை எல்லாம்␢ நான் எண்ணிவிடலாம்; அவர்கள்␢ என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.⁾18 ⁽என் ஆடைகளைத் தங்களிடையே␢ பங்கிட்டுக் கொள்கின்றனர்;␢ என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.⁾19 ⁽நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்␢ தொலைவில் போய்விடாதேயும்;␢ என் வலிமையே! எனக்குத் துணை செய்ய␢ விரைந்து வாரும்.⁾20 ⁽வாளுக்கு இரையாகாதபடி␢ என் உயிரைக் காத்தருளும்;␢ இந்த நாய்களின் வெறியினின்று␢ என் ஆருயிரைக் காப்பாற்றும்;⁾21 ⁽இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து␢ என்னைக் காப்பாற்றும்;␢ காட்டெருமைகளின் கொம்புகளில்␢ சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.⁾22 ⁽உமது பெயரை␢ என் சகோதரருக்கு அறிவிப்பேன்;␢ சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾23 ⁽ஆண்டவருக்கு அஞ்சுவோரே;␢ அவரைப் புகழுங்கள்;␢ யாக்கோபின் மரபினரே,␢ அனைவரும் அவரை␢ மாட்சிமைப்படுத்துங்கள்;␢ இஸ்ரயேல் மரபினரே,␢ அனைவரும் அவரைப் பணியுங்கள்.⁾24 ⁽ஏனெனில், எளியோரின் சிறுமையை␢ அவர் அற்பமாக எண்ணவில்லை;␢ அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;␢ தமது முகத்தை அவர்களுக்கு␢ மறைக்கவுமில்லை; § தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்␢ அவர்களுக்குச் செவிசாய்த்தார்.⁾25 ⁽மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்␢ உம்மிடமிருந்து எழுவதாக!␢ உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்␢ என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.⁾26 ⁽எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;␢ ஆண்டவரை நாடுவோர்␢ அவரைப் புகழ்வராக!␢ அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!⁾27 ⁽பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்␢ அனைவரும் இதை உணர்ந்து␢ ஆண்டவர் பக்கம் திரும்புவர்;␢ பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்␢ அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.⁾28 ⁽ஏனெனில் அரசு ஆண்டவருடையது;␢ பிற இனத்தார்மீதும்␢ அவர் ஆட்சி புரிகின்றார்.⁾29 ⁽மண்ணின் செல்வர் யாவரும்␢ அவரைப் பணிவர்;*␢ புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்␢ தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்␢ அவரை வணங்குவர்.⁾30 ⁽வருங்காலத் தலைமுறையினர்␢ அவரைத் தொழுவர்;␢ இனிவரும் தலைமுறையினருக்கு␢ ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.⁾31 ⁽அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;␢ இனி பிறக்கப்போகும் மக்களுக்கு␢ ‛இதை அவரே செய்தார்’ என்பர்.⁾