1 ⁽ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில், அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு.⁾

2 ⁽ஆண்டவரால் மீட்படைந்தோர்,␢ எதிரியின் கையினின்று␢ அவரால் மீட்கப்பட்டோர்,⁾

3 ⁽கிழக்கினின்றும் மேற்கினின்றும்,␢ வடக்கினின்றும் தெற்கினின்றும்,␢ பல நாடுகளினின்றும்␢ ஒன்று சேர்க்கப்பட்டோர்␢ சொல்வார்களாக.⁾

4 ⁽பாலைநிலத்தில் பாழ் வெளியில்␢ சிலர் அலைந்து திரிந்தனர்;␢ குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல␢ அவர்கள் வழி காணவில்லை;⁾

5 ⁽பசியுற்றனர்; தாகமுற்றனர்;␢ மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.⁾

6 ⁽தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து␢ அவர்களை அவர் விடுவித்தார்.⁾

7 ⁽நேரிய பாதையில்␢ அவர்களை வழிநடத்தினார்;␢ குடியிருக்கும் நகரை␢ அவர்கள் அடையச் செய்தார்.⁾

8 ⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடர்களுக்காக அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு,␢ அவர்கள் அவருக்கு␢ நன்றி செலுத்துவார்களாக!⁾

9 ⁽ஏனெனில், தாகமுற்றோர்க்கு␢ அவர் நிறைவளித்தார்;␢ பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.⁾

10 ⁽சிலர் காரிருளிலும்␢ சாவின் நிழலிலும் கிடந்தனர்;␢ விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.⁾

11 ⁽ஏனெனில், அவர்கள்␢ இறைவனின் கட்டளைகளை␢ எதிர்த்து நின்றனர்;␢ உன்னதரின் அறிவுரைகளைப்␢ புறக்கணித்தனர்.⁾

12 ⁽கடும் வேலையால்␢ அவர் அவர்களின் உள்ளத்தைச்␢ சிறுமைப்படுத்தினார்;␢ அவர்கள் நிலைகுலைந்து போயினர்;␢ அவர்களுக்குத் துணைசெய்வார்␢ எவருமிலர்.⁾

13 ⁽அவர்கள் தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர் அவர்களைத்␢ துன்பங்களிலிருந்து விடுவித்தார்.⁾

14 ⁽காரிருளிலும் சாவின் நிழலிலும்␢ கிடந்த அவர்களை␢ அவர் வெளிக்கொணர்ந்தார்.␢ அவர்களைப் பிணித்திருந்த␢ தளைகளைத் தகர்த்தெறிந்தார்.⁾

15 ⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடரான அவர்களுக்கு அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு,␢ அவர்கள் அவருக்கு␢ நன்றி செலுத்துவார்களாக!⁾

16 ⁽ஏனெனில், வெண்கலக் கதவுகளை␢ அவர் தகர்த்துவிட்டார்;␢ இரும்புத் தாழ்ப்பாள்களை␢ உடைத்துவிட்டார்.⁾

17 ⁽சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு␢ நோய்களுக்கு உள்ளாயினர்;␢ அவர்களுடைய␢ தீச்செயல்களின் பொருட்டுத்␢ துன்பங்களுக்கு உள்ளாயினர்.⁾

18 ⁽எல்லா உணவையும்␢ அவர்களின் மனம் வெறுத்தது;␢ சாவின் வாயில்களை␢ அவர்கள் நெருங்கினார்கள்.⁾

19 ⁽அவர்கள் தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர் அவர்களைத்␢ துன்பங்களினின்று விடுவித்தார்.⁾

20 ⁽தம் வார்த்தையை அவர் அனுப்பி␢ அவர்களைக் குணப்படுத்தினார்;␢ அழிவினின்று அவர்களை விடுவித்தார்.⁾

21 ⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடரான அவர்களுக்கு␢ அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு,␢ அவர்கள் அவருக்கு நன்றி␢ செலுத்துவார்களாக!⁾

22 ⁽நன்றிப் பலிகளை␢ அவர்கள் செலுத்துவார்களாக!␢ அக்களிப்போடு அவர்தம் செயல்களைப்␢ புகழ்ந்தேத்துவார்களாக!⁾

23 ⁽சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;␢ நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.⁾

24 ⁽அவர்களும்␢ ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்;␢ ஆழ்கடலில் அவர்தம்␢ வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.⁾

25 ⁽அவர் ஒரு வார்த்தை சொல்ல,␢ புயல் காற்று எழுந்தது;␢ அது கடலின் அலைகளைக்␢ கொந்தளிக்கச் செய்தது.⁾

26 ⁽அவர்கள் வானமட்டும்␢ மேலே வீசப்பட்டனர்;␢ பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்;␢ அவர்கள் உள்ளமோ␢ இக்கட்டால் நிலைகுலைந்தது.⁾

27 ⁽குடிவெறியரைப் போல்␢ அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்;␢ அவர்களின் திறனெல்லாம்␢ பயனற்றுப் போயிற்று.⁾

28 ⁽தம் நெருக்கடியில் அவர்கள்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து␢ அவர் அவர்களை விடுவித்தார்.⁾

29 ⁽புயல்காற்றை அவர்␢ பூந்தென்றலாக மாற்றினார்;␢ கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.⁾

30 ⁽அமைதி உண்டானதால்␢ அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;␢ அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு␢ அவர் அவர்களைக்␢ கொண்டு போய்ச் சேர்த்தார்.⁾

31 ⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடரான அவர்களுக்கு அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு␢ அவர்கள் அவருக்கு␢ நன்றி செலுத்தவார்களாக!⁾

32 ⁽மக்களின் பேரவையில்␢ அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக!␢ பெரியோரின் மன்றத்தில்␢ அவரைப் போற்றுவார்களாக!⁾

33 ⁽ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்;␢ நீரோடைகளை அவர்␢ வறண்ட தரையாக்கினார்.⁾

34 ⁽செழிப்பான நிலத்தை உவர்␢ நிலமாக்கினார்;␢ அங்குக் குடியிருந்தோரின்␢ தீச்செயலை முன்னிட்டு␢ இப்படிச் செய்தார்.⁾

35 ⁽பாலை நிலத்தையோ␢ நீர்த் தடாகமாக மாற்றினார்;␢ வறண்ட நிலத்தை␢ நீருற்றுகளாகச் செய்தார்.⁾

36 ⁽பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்;␢ அவர்கள் அங்கே குடியிருக்க␢ நகரொன்றை அமைத்தனர்.⁾

37 ⁽அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்;␢ திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்;␢ அறுவடைக்கான கனிகளை␢ அவை ஈன்றன.⁾

38 ⁽அவர் ஆசி வழங்கினார்; அவர்கள்␢ மிகுதியாகப் பல்கிப் பெருகினர்;␢ அவர்களின் கால்நடைகளைக்␢ குறைந்துபோக விடவில்லை.⁾

39 ⁽பின்பு, அவர்களின் தொகை குறைந்தது;␢ அவர்கள் ஒடுக்கப்பட்டு,␢ துன்புறுத்துப்பட்டு␢ இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.⁾

40 ⁽தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி,␢ அவர்களைப் பாதையற்ற␢ பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.⁾

41 ⁽ஆனால், எளியோரை அவர்␢ துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார்,␢ அவர்கள் குடும்பங்களை␢ மந்தை போல் பெருகச் செய்தார்.⁾

42 ⁽நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து␢ மகிழ்கின்றனர்;␢ தீயோர் யாவரும் தங்கள் வாயை␢ மூடிக்கொள்கின்றனர்.⁾

43 ⁽ஞானமுள்ளோர் இவற்றைக்␢ கவனத்தில் கொள்ளட்டும்!␢ அவர்கள் ஆண்டவரின் பேரன்பை␢ உணர்ந்து கொள்ளட்டும்!⁾

சங்கீதம் 107 ERV IRV TRV