Bible

Proverbs 9 - DBY (Tamil)

1 Wisdom hath built her house, she hath hewn out her seven pillars;ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

2 she hath slaughtered her cattle, she hath mingled her wine, she hath also prepared her table;தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

3 she hath sent forth her maidens: she crieth upon the summits of the high places of the city,தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

4 Whoso is simple, let him turn in hither. To him that is void of understanding, she saith,புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.

5 Come, eat ye of my bread, and drink of the wine that I have mingled.நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

6 Forsake follies and live, and go in the way of intelligence.பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

7 He that instructeth a scorner getteth to himself shame; and he that reproveth a wicked [man] [getteth] to himself a blot.பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

8 Reprove not a scorner, lest he hate thee; reprove a wise [man], and he will love thee.பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

9 Impart to a wise [man], and he will become yet wiser; teach a righteous [man], and he will increase learning.ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

10 The fear of Jehovah is the beginning of wisdom; and the knowledge of the Holy is intelligence.கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

11 For by me thy days shall be multiplied, and years of life shall be added to thee.என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

12 If thou art wise, thou shalt be wise for thyself; and if thou scornest, thou alone shalt bear it.நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்றும் சொல்லுகிறது.

13 The foolish woman is clamorous; she is stupid, and knoweth nothing.மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

14 And she sitteth at the entry of her house, on a seat in the high places of the city,அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,

15 to call passers-by who go right on their ways:தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

16 Whoso is simple, let him turn in hither. And to him that is void of understanding she saith,எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

17 Stolen waters are sweet, and the bread of secrecy is pleasant.மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

18 But he knoweth not that the dead are there; [that] her guests are in the depths of Sheol.ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

Tamil Bible