Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 29:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 29 நீதிமொழிகள் 29:3

நீதிமொழிகள் 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

Tamil Indian Revised Version
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான்.

திருவிவிலியம்
⁽ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.⁾

Proverbs 29:2Proverbs 29Proverbs 29:4

King James Version (KJV)
Whoso loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth his substance.

American Standard Version (ASV)
Whoso loveth wisdom rejoiceth his father; But he that keepeth company with harlots wasteth `his’ substance.

Bible in Basic English (BBE)
A man who is a lover of wisdom is a joy to his father: but he who goes in the company of loose women is a waster of wealth.

Darby English Bible (DBY)
Whoso loveth wisdom rejoiceth his father; but he that is a companion of harlots destroyeth [his] substance.

World English Bible (WEB)
Whoever loves wisdom brings joy to his father; But a companion of prostitutes squanders his wealth.

Young’s Literal Translation (YLT)
A man loving wisdom rejoiceth his father, And a friend of harlots destroyeth wealth.

நீதிமொழிகள் Proverbs 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
Whoso loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth his substance.

אִֽישׁʾîšeesh
אֹהֵ֣בʾōhēboh-HAVE
חָ֭כְמָהḥākĕmâHA-heh-ma
יְשַׂמַּ֣חyĕśammaḥyeh-sa-MAHK
אָבִ֑יוʾābîwah-VEEOO
וְרֹעֶ֥הwĕrōʿeveh-roh-EH
ז֝וֹנ֗וֹתzônôtZOH-NOTE
יְאַבֶּדyĕʾabbedyeh-ah-BED
הֽוֹן׃hônhone

இணை வசனம்

Luke 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

Proverbs 10:1
சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

Luke 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

Proverbs 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

Proverbs 27:11
என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

Proverbs 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

Proverbs 6:26
வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

Proverbs 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

Luke 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

Proverbs 28:19
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

Proverbs 23:24
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

Proverbs 23:15
என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

Proverbs 21:20
வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

Proverbs 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.


Tags ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான் வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்
நீதிமொழிகள் 29:3 Concordance நீதிமொழிகள் 29:3 Interlinear நீதிமொழிகள் 29:3 Image