Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:20

நீதிமொழிகள் 27:20
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

Tamil Indian Revised Version
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனிதனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

Tamil Easy Reading Version
ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.

திருவிவிலியம்
⁽பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவ தேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.⁾

Proverbs 27:19Proverbs 27Proverbs 27:21

King James Version (KJV)
Hell and destruction are never full; so the eyes of man are never satisfied.

American Standard Version (ASV)
Sheol and Abaddon are never satisfied; And the eyes of man are never satisfied.

Bible in Basic English (BBE)
The underworld and Abaddon are never full, and the eyes of man have never enough.

Darby English Bible (DBY)
Sheol and destruction are insatiable; so the eyes of man are never satisfied.

World English Bible (WEB)
Sheol and Abaddon are never satisfied; And a man’s eyes are never satisfied.

Young’s Literal Translation (YLT)
Sheol and destruction are not satisfied, And the eyes of man are not satisfied.

நீதிமொழிகள் Proverbs 27:20
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
Hell and destruction are never full; so the eyes of man are never satisfied.

שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
וַ֭אֲבַדֹּהwaʾăbaddōVA-uh-va-doh
לֹ֣אlōʾloh
תִשְׂבַּ֑עְנָהtiśbaʿnâtees-BA-na
וְעֵינֵ֥יwĕʿênêveh-ay-NAY
הָ֝אָדָ֗םhāʾādāmHA-ah-DAHM
לֹ֣אlōʾloh
תִשְׂבַּֽעְנָה׃tiśbaʿnâtees-BA-na

இணை வசனம்

Ecclesiastes 1:8
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.

Habakkuk 2:5
அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல் அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும்,

Proverbs 30:15
தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

Ecclesiastes 6:7
மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

Ecclesiastes 2:10
என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.

1 John 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

Jeremiah 22:17
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

Ecclesiastes 5:10
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

Ecclesiastes 4:8
ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.

Proverbs 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

Proverbs 15:11
பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

Job 26:6
அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.


Tags பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை
நீதிமொழிகள் 27:20 Concordance நீதிமொழிகள் 27:20 Interlinear நீதிமொழிகள் 27:20 Image