விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வலிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Vituthalai Naayakan PowerPoint
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் PPT
Download Vituthalai Naayakan Tamil PPT