பல்லவி
வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்
அனுபல்லவி
பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு
சரணங்கள்
1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு
2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க
ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு
3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு
Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள் Lyrics in English
pallavi
varuvaar viliththirungal , Yesunaathar
varuvaar viliththirungal
anupallavi
periyavar siriyavar paethaiyar maethaiyar
saruvarkkum naduththeerththuth thaku palan aliththida – varu
saranangal
1.paerikaiyaal anndapiththikalum kulunga
paer ekkaalath thoniyaal paeyk kanangal kalanga
thaaranniyor malanga, thamaip pattinorkalum
seernirai thootharum sernthu soolnthida – varu
2.vaanam madamadenka, vaiyam kidukidenka
eenap paeyaich serntha evarum nadunadunga
maanam inti vaalntha maa paathakar adanga
njaana kaanam paadanallor sapai thodanga – varu
3.visuvaasikal thamai mechchip pukalutharkum
maelaa motcha thalaththor saala makilutharkum
visuvaasa eenarai viyavaa thikalutharkum
vinnnnor kulaangal soola, annnal kiristharasar – varu
PowerPoint Presentation Slides for the song Varuvaar Vilithirungal – வருவார் விழித்திருங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வருவார் விழித்திருங்கள் PPT
Varuvaar Vilithirungal PPT