நல் உயர் பருவதம் இதோ
பல்லவி
உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!
அனுபல்லவி
தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன
சரணங்கள்
1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்
மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன
2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;
மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன
3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;
நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். – உன
4. பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும்,
இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. – உன
5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்;
தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. – உன
6. போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்;
காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. – உன
7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்,
இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. – உன
Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர் Lyrics in English
nal uyar paruvatham itho
pallavi
unakkoththaasai varum nal uyar paruvatham,-itho!
anupallavi
thinamum manathu nonthu sinthai kalanguvonae. – una
saranangal
1. vaanam puvi thiraiyum vakuththa nanmaip pithaavin
maatchimaiyin karamae vallamaiyulla thallo? – una
2. kaalaith thallaadavottar, karaththaith thalaravottar;
maalai urangamaattar, marathiyaayp poka maattar. – una
3. karththarunaik kaappavaraam, karamathil serppavaraam;
niththiyam untanukku nilalaayiruppavaraam. – una
4. pakalil veyilenilum, iravil nilavenilum,
ikal tharuvathumillai, innal seyvathumillai. – una
5. theengu thodaraathunnai, theemai padaraathunmael;
thaanguvaar thoothar koti, thaalidaraathapati. – una
6. pokkum aaseervaathamaam, varaththum aaseervaathamaam;
kaakkaik kunjukal muthal kathari nampividumae. – una
7. thunpa thuyaraththilum thukka samayaththilum,
inpamurum poluthum ellaam unakkavarae. – una
PowerPoint Presentation Slides for the song Unakothaasai Varum Nal Uyar – உனக்கொத்தாசை வரும் நல் உயர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கொத்தாசை வரும் நல் உயர் PPT
Unakothaasai Varum Nal Uyar PPT