Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான — சீரே

சரணங்கள்

1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே

2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே

3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரே

4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரே

Seeresu Baalan Jeyamanu Velan – சீரேசு பாலன் ஜெயமனு வேலன் Lyrics in English

seeraesu paalan jeyamanu vaelan
seer naamaththaith thinamae pottuvomae

anupallavi

paaraalum vaenthan pakaronnnnaa mainthan,
thaaraala maakath thaamae manuvaana — seerae

saranangal

1. ennnarum perumaan aelaich saayalaaka
mannnni laekina maatchimai yaalae,
vinnnavarkal potta, vettikkavi saatta
vannnam paati naam makilnthida vaenndaamo? — seerae

2. unnatha paranuk koppillaa makimai
innilaththinil elilsamaa thaanam,
mannuyirkal meethu maapiriyam onga
thannuyir thantha thayavai enna solvom? — seerae

3. paavap pinniyaalae paathakaraip polae
saapaththai nammael naam thaetinomae,
kopaththai oliththae kuvalayaththai meetka
theepamaay vantha thaevamainthanaana — seerae

4. niththanae, en paavam eththanaiyaanaalum
siththam urukich seerkoora vaenum,
aththanae, un paatham anntinaen ippothum;
paththiyaay unnaip pakaruvaen eppothum — seerae

PowerPoint Presentation Slides for the song Seeresu Baalan Jeyamanu Velan – சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சீரேசு பாலன் ஜெயமனு வேலன் PPT
Seeresu Baalan Jeyamanu Velan PPT

சீரே சீரேசு பாலன் ஜெயமனு வேலன் சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே அனுபல்லவி பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன் தாராள மாகத் தாமே மனுவான English