Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

பல்லவி

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

அனுபல்லவி

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத

சரணங்கள்

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத

2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத

3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். – சந்தத

Santhatha Mangalam – சந்தத மங்களம் மங்களமே Lyrics in English

Santhatha Mangalam Lyrics – santhatha mangalam mangalamae

pallavi

santhatha mangalam, mangalamae!
santhatha mangalam, mangalamae!

anupallavi

antham aathi ilaan arul seyaa,
enthai yaesu kiristhu sakaayaa. – santhatha

saranangal

1. antharam, param poomi adangalum vinthai maevi niraintha visaalaa,
intha naal manam seyyum ivark karul thanthun aasitaiya saattum, thayaaparaa. – santhatha

2. vaiyamutta manavaraip panthalil, aiyanae, un arutkoti vanthirun-thu
uyya aing kuriyaalum uvantharul seyyum, aeka thiriththuva thaevaa – santhatha

3. karththanae, karunnaik kadalae, uyar peththalaip pirathaapa visedaa!
puththirar peravum pukal ongavum siththam vaiththae ivark karul seythidum. – santhatha

PowerPoint Presentation Slides for the song Santhatha Mangalam – சந்தத மங்களம் மங்களமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தத மங்களம் மங்களமே PPT
Santhatha Mangalam PPT

English