Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிழ்ச்சி பண்டிகை

1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.

2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.

3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்
புல்லணை கந்தை போர்த்தினீர்.

4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
மா தேசு விண் மண் தேக்கவே,
நள்ளிருள் நடுப் பகலாம்,
வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.

5 ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.

6 பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும், ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Lyrics in English

1 makilchchi panntikai kanntoom,
akaththil paalanaip pettaோm;
vinn seythi maeyppar kaettanar,
vinn ettum makil pettanar.

2 maa thaalvaay meetpar kidanthaar,
aa! vaana maatchi thuranthaar;
sirasil kireedam kaannomae,
arasin selvam yaathumae.

3 paar maanthar thangam maatchiyum
aa! mainthaa illai ummilum; vinnnnorin vaalththuppetta neer
pullannai kanthai porththineer.

4 aa! Yesu paalan kottilin
maa thaesu vinn mann thaekkavae,
nallirul nadup pakalaam,
vallalmun sooriyan thorkumaam.

5 aa! aathi pakthar thaettamae!
aa! jothi vaalvin vitivae!
aa! eesan thiru vaarththai neer!
thaaveethin mainthan karththan neer.

6 panntikai inte varuveer,
thinnnamaay nenjil thanguveer;
oyntha em kaanam meenndidum, oyvinti pooriththaarththidum.

PowerPoint Presentation Slides for the song Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்ச்சி பண்டிகை PPT
Magilchi Pandikai PPT

English