Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்னிய முகமலர்ந்து

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால்
உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து
மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம்
மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர்

பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி
புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த
கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை
வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார்

விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே
செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானே
குத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானே
இதனை பாவந் செய்தேன் இரங்கியாட் கொள்ளுமையா

மன்னீப்பீர் எந்தன் பாவம் மைந்தர்தம் சிலுவை நோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் மைந்தர் ஐங்காயநோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் மரிக்கும் தம்மைந்தர் நோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் ஆமென் ஆமென்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Lyrics in English

inniya mukamalarnthu iruthaya thurukumanpaal
unnatha thaevamainthan ulakinpaar karunnai koornthu
manneeppeer enpithaavae mathalaikalivarkal kuttam
manneeppeer enturuku manuvukkae aamen enpeer

pathilukku pathil seyenta palaiya pramaanamaatti
puthiyathang karpanaiyai puviyathil naatta vantha
kathi tharung karunnaimoorththi karunnaiyutturuki thammai
vathaiththidum yootharkatkaay varunthiyae jepiththu nintar

vittathum veenan naanae veruththathum veenan naanae
settathum sevakan naanae arainthathum atimai naanae
kuththina koran naanae kolaipurinthavanum naanae
ithanai paavan seythaen irangiyaat kollumaiyaa

manneeppeer enthan paavam mainthartham siluvai Nnokki
manneeppeer enthan paavam mainthar aingaayaNnokki
manneeppeer enthan paavam marikkum thammainthar Nnokki
manneeppeer enthan paavam aamen aamen

PowerPoint Presentation Slides for the song Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்னிய முகமலர்ந்து PPT
Inniya Mugamalarnthu PPT

English