🏠  Lyrics  Chords  Bible 

எனக்காய் ஜீவன் விட்டவரே PPT

1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே - இயேசு
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் - இயேசு
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் - இயேசு


Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே PowerPoint



எனக்காய் ஜீவன் விட்டவரே

எனக்காய் ஜீவன் விட்டவரே PPT

Download Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே Tamil PPT