ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய்
2. வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய்
3. கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே — ஆனந்தமாய்
4. உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும் நான் உம் அடிமை — ஆனந்தமாய்
5. தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன் — ஆனந்தமாய்
Aananthamaay Inpak Kaanaan Lyrics in English
aananthamaay inpak kaanaan aekiduvaen
thooya pithaavin mukam tharisippaen
naalukku naal arputhamaay ennaith thaangidum
naathan Yesu ennotiruppaar
1. settinintennaith thookkiyeduththu
maatti ullam puthithaakkinaarae
kallaana en ullam urukkina kalvaariyaik
kanndu nantiyudan paadiduvaen — aananthamaay
2. vaalipa naalil Yesuvaik kanntaen
vaanjaiyudan ennaith thaeti vanthaar
etharkumae uthavaa ennaiyum kanndeduththaar
Yesuvin anpai naan en solluvaen — aananthamaay
3. karththarin siththam seythida niththam
thaththam seythae ennai arppanniththaen
Yesu allaal aasai ippoovinil vaetae illai
entum enakkavar aatharavae — aananthamaay
4. ummaip pin sentu ooliyam seythu
umpaatham sera vaanjikkiraen
thaarum thaevaa aelaikkum maaraatha um kirupai
kann paarum entum naan um atimai — aananthamaay
5. thaettiduthae um vaakkukal ennai
aattiduthae unthan samookamae
pelaththin mael pelanatainthu naan seruvaen
paerinpa seeyonil vaalnthiduvaen — aananthamaay
PowerPoint Presentation Slides for the song Aananthamaay Inpak Kaanaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் PPT
Aananthamaay Inpak Kaanaan PPT