யோனா 2 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:2 ⁽“ஆண்டவரே! எனக்கு␢ இக்கட்டு வந்த வேளைகளில்␢ நான் உம்மை நோக்கி மன்றாடினேன். § நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.␢ பாதாளத்தின் நடுவிலிருந்து␢ உம்மை நோக்கிக் கதறினேன்;␢ என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்;⁾3 ⁽நடுக் கடலின் ஆழத்திற்குள்␢ என்னைத் தள்ளினீர்;␢ தண்ணீர்ப் பெருக்கு␢ என்னைச் சூழ்ந்துகொண்டது.␢ நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம்␢ என்மீது புரண்டு கடந்து சென்றன.⁾4 ⁽அப்பொழுது நான்,␢ ‛உமது முன்னிலையிலிருந்து␢ புறம்பே தள்ளப்பட்டேன்;␢ இனி எவ்வாறு உமது கோவிலைப்␢ பார்க்கப் போகிறேன்’ என்று␢ சொல்லிக்கொண்டேன்.⁾5 ⁽மூச்சுத் திணறும்படி␢ தண்ணீர் என்னை அழுத்திற்று;␢ ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது;␢ கடற்பாசி என் தலையைச் § சுற்றிக் கொண்டது.⁾6 ⁽மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை␢ நான் கீழுலகிற்கு இறங்கினேன்.␢ அங்கேயே என்னை என்றும்␢ இருத்தி வைக்கும்படி,␢ அதன் தாழ்ப்பாள்கள்␢ அடைத்துக் கொண்டன.␢ ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே,␢ நீர் அந்தக் குழியிலிருந்து § என்னை உயிரோடு மீட்டீர்.⁾7 ⁽என் உயிர்␢ ஊசலாடிக் கொண்டிருந்தபோது,␢ ஆண்டவரே! உம்மை நினைத்து␢ வேண்டுதல் செய்தேன்.␢ உம்மை நோக்கி␢ நான் எழுப்பிய மன்றாட்டு␢ உமது கோவிலை வந்தடைந்தது.⁾8 ⁽பயனற்ற சிலைகளை␢ வணங்குகின்றவர்கள்␢ உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக்␢ கைவிட்டார்கள்.⁾9 ⁽ஆனால், நான்␢ உம்மைப் புகழ்ந்து பாடி␢ உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்;␢ நான் செய்த பொருத்தனைகளை § நிறைவேற்றுவேன்.␢ மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று␢ வேண்டிக்கொண்டார்.⁾⒫10 ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.