Bible

Job 38 - WEB (Tamil)

1 Then Yahweh answered Job out of the whirlwind,அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு பிரதியுத்தரமாக:

2 "Who is this who darkens counsel By words without knowledge?அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?

3 Brace yourself like a man, For I will question you, then you answer me!இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

4 "Where were you when I laid the foundations of the earth? Declare, if you have understanding.நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

5 Who determined the measures of it, if you know? Or who stretched the line on it?அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

6 Whereupon were the foundations of it fastened? Or who laid its cornerstone,அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

7 When the morning stars sang together, And all the sons of God shouted for joy?அப்பொழுது விடிற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

8 "Or who shut up the sea with doors, When it broke forth from the womb,கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

9 When I made clouds the garment of it, Thick darkness a swaddling-band for it,மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்.

10 Marked out for it my bound, Set bars and doors,நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

11 And said, 'Here you may come, but no further; Here shall your proud waves be stayed?'இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

12 "Have you commanded the morning in your days, And caused the dawn to know its place;துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

13 That it might take hold of the ends of the earth, And shake the wicked out of it?உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

14 It is changed as clay under the seal, And stands forth as a garment.பூமி முத்திரையிடப்பட்ட களிம்பைபோல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

15 From the wicked, their light is withheld, The high arm is broken.துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

16 "Have you entered into the springs of the sea? Or have you walked in the recesses of the deep?நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

17 Have the gates of death been revealed to you? Or have you seen the gates of the shadow of death?மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

18 Have you comprehended the earth in its breadth? Declare, if you know it all.பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

19 "What is the way to the dwelling of light? As for darkness, where is the place of it,வெளிச்சம் வாசமாயிருக்குமிடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?

20 That you should take it to the bound of it, That you should discern the paths to the house of it?அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

21 Surely you know, for you were born then, And the number of your days is great!நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின்தொகை அவ்வளவு பெரிதோ?

22 Have you entered the treasuries of the snow, Or have you seen the treasures of the hail,உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

23 Which I have reserved against the time of trouble, Against the day of battle and war?ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

24 By what way is the lightning distributed, Or the east wind scattered on the earth?வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

25 Who has cut a channel for the flood water, Or the path for the thunderstorm;பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

26 To cause it to rain on a land where no man is; On the wilderness, in which there is no man;பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

27 To satisfy the waste and desolate ground, To cause the tender grass to spring forth?வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

28 Does the rain have a father? Or who fathers the drops of dew?மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

29 Out of whose womb came the ice? The gray frost of the sky, who has given birth to it?உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப்பெற்றவர் யார்?

30 The waters become hard like stone, When the surface of the deep is frozen.ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

31 "Can you bind the cluster of the Pleiades, Or loosen the cords of Orion?அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?

32 Can you lead forth the constellations in their season? Or can you guide the Bear with her cubs?இராசிகளை, அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச்சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

33 Do you know the laws of the heavens? Can you establish the dominion of it over the earth?வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

34 "Can you lift up your voice to the clouds, That abundance of waters may cover you?ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?

35 Can you send forth lightnings, that they may go? Do they report to you, 'Here we are?'நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?

36 Who has put wisdom in the inward parts? Or who has given understanding to the mind?அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

37 Who can number the clouds by wisdom? Or who can pour out the bottles of the sky,ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

38 When the dust runs into a mass, And the clods of earth stick together?தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

39 "Can you hunt the prey for the lioness, Or satisfy the appetite of the young lions,நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

40 When they crouch in their dens, And lie in wait in the thicket?சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

41 Who provides for the raven his prey, When his young ones cry to God, And wander for lack of food?காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

Tamil Bible