1 ⁽இதைக்கண்டு நடுங்குகிறது␢ என் இதயம்;␢ தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.⁾

2 ⁽அவரது குரலின் இடியோசையையும்␢ அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்␢ கவனமுடன் கேளுங்கள்.⁾

3 ⁽விசும்பின்கீழ் மின்னலை␢ மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின்␢ எல்லைவரை செல்ல வைக்கின்றார்.⁾

4 ⁽அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;␢ பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;␢ மின்னலை நிறுத்தார்␢ அவர்தம் குரல் ஒலிக்கையிலே.⁾

5 ⁽கடவுள் வியத்தகு முறையில்␢ தம் குரலால் முழங்குகின்றார்;␢ நம் அறிவுக்கு எட்டாத␢ பெரியனவற்றைச் செய்கின்றார்.⁾

6 ⁽ஏனெனில், உறைபனியை␢ ‘மண்மிசை விழு” என்பார்;␢ மாரியையும் பெருமழையையும்␢ ‘உரத்துப் பெய்க” என்பார்.⁾

7 ⁽எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,␢ எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.⁾

8 ⁽பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;␢ தம் குகைக்குள் அது தங்கும்.⁾

9 ⁽அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்␢ வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.⁾

10 ⁽கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;␢ பரந்த நீர்நிலை உறைந்து போகும்.⁾

11 ⁽அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;␢ கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.⁾

12 ⁽மேகம் அவரது ஆணைப்படியே␢ சுழன்று ஆடும்;␢ அவர் ஆணையிடுவதை எல்லாம்␢ மண்மிசை செய்யும்.⁾

13 ⁽கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ␢ இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.⁾

14 ⁽யோபே! செவிகொடும்;␢ இறைவனின் வியத்தகு செயல்களை␢ நின்று நிதானித்துக் கவனியும்.⁾

15 ⁽கடவுள் எவ்வாறு அவற்றை␢ ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,␢ அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்␢ தெறிக்கின்றன என்றோ அறிவீரா?⁾

16 ⁽முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என␢ உமக்குத் தெரியுமா?␢ அவை நிறை அறிவுள்ளவரின்␢ வியத்தகு செயல்கள் அல்லவா!⁾

17 ⁽தென்திசைக் காற்றினால்␢ நிலம் இறுக்கப்படுகையில்␢ உம் உடையின் வெப்பத்தால்␢ நீவிர் புழுங்குகின்றீர்.⁾

18 ⁽வார்ப்படக் கண்ணாடியை ஒத்த␢ திண்ணிய விசும்பை␢ அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?⁾

19 ⁽நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும்␢ என்று கற்பியும்; இருளின் முகத்தே␢ வகைதெரியாது உழல்கின்றோம்.⁾

20 ⁽‘நான் பேசுவேன்” என்று␢ எவர் அவரிடம் சொல்வார்?␢ அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?⁾

21 ⁽காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்␢ வானில் கதிரவன் ஒளிரும்போது,␢ மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!⁾

22 ⁽பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;␢ அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.⁾

23 ⁽எல்லாம் வல்லவரை␢ நாம் கண்டுபிடிக்க முடியாது;␢ ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே!␢ நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.⁾

24 ⁽ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;␢ எல்லாம் தெரியும் என்போரை␢ அவர் திரும்பியும் பாரார்.⁾

யோபு 37 ERV IRV TRV