Numbers 26:20
யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
Joshua 22:20சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேல் எல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன் மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
1 Chronicles 2:6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
1 Chronicles 6:41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
1 Chronicles 9:6சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.