Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3 தானியேல் 3:27

தானியேல் 3:27
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்த மனிதர்களுடைய உடல்கள் நெருப்பினால் பாதிக்கப்படாமலும், அவர்களுடைய தலைமுடி கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், நெருப்பின் வாசனை அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், அரசனின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை.

திருவிவிலியம்
சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.

Daniel 3:26Daniel 3Daniel 3:28

King James Version (KJV)
And the princes, governors, and captains, and the king’s counsellors, being gathered together, saw these men, upon whose bodies the fire had no power, nor was an hair of their head singed, neither were their coats changed, nor the smell of fire had passed on them.

American Standard Version (ASV)
And the satraps, the deputies, and the governors, and the king’s counsellors, being gathered together, saw these men, that the fire had no power upon their bodies, nor was the hair of their head singed, neither were their hosen changed, nor had the smell of fire passed on them.

Bible in Basic English (BBE)
And the captains, the chiefs, and the rulers, and the king’s wise men who had come together, saw these men, over whose bodies the fire had no power, and not a hair of their heads was burned, and their coats were not changed, and there was no smell of fire about them.

Darby English Bible (DBY)
And the satraps, the prefects, and the governors, and the king’s counsellors, being gathered together, saw these men, upon whose bodies the fire had had no power, nor was the hair of their head singed, neither were their hosen changed, nor had the smell of fire passed on them.

World English Bible (WEB)
The satraps, the deputies, and the governors, and the king’s counselors, being gathered together, saw these men, that the fire had no power on their bodies, nor was the hair of their head singed, neither were their pants changed, nor had the smell of fire passed on them.

Young’s Literal Translation (YLT)
and gathered together, the satraps, the prefects, and the governors, and the counsellors of the king, are seeing these men, that the fire hath no power over their bodies, and the hair of their head hath not been singed, and their coats have not changed, and the smell of fire hath not passed on them.

தானியேல் Daniel 3:27
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
And the princes, governors, and captains, and the king's counsellors, being gathered together, saw these men, upon whose bodies the fire had no power, nor was an hair of their head singed, neither were their coats changed, nor the smell of fire had passed on them.

וּ֠מִֽתְכַּנְּשִׁיןûmitĕkkannĕšînOO-mee-teh-ka-neh-sheen
אֲחַשְׁדַּרְפְּנַיָּ֞אʾăḥašdarpĕnayyāʾuh-hahsh-dahr-peh-na-YA
סִגְנַיָּ֣אsignayyāʾseeɡ-na-YA
וּפַחֲוָתָא֮ûpaḥăwātāʾoo-fa-huh-va-TA
וְהַדָּבְרֵ֣יwĕhaddobrêveh-ha-dove-RAY
מַלְכָּא֒malkāʾmahl-KA
חָזַ֣יִןḥāzayinha-ZA-yeen
לְגֻבְרַיָּ֣אlĕgubrayyāʾleh-ɡoov-ra-YA
אִלֵּ֡ךְʾillēkee-LAKE
דִּי֩diydee
לָֽאlāʾla
שְׁלֵ֨טšĕlēṭsheh-LATE
נוּרָ֜אnûrāʾnoo-RA
בְּגֶשְׁמְה֗וֹןbĕgešmĕhônbeh-ɡesh-meh-HONE
וּשְׂעַ֤רûśĕʿaroo-seh-AR
רֵֽאשְׁהוֹן֙rēʾšĕhônray-sheh-HONE
לָ֣אlāʾla
הִתְחָרַ֔ךְhitḥārakheet-ha-RAHK
וְסַרְבָּלֵיה֖וֹןwĕsarbālêhônveh-sahr-ba-lay-HONE
לָ֣אlāʾla
שְׁנ֑וֹšĕnôsheh-NOH
וְרֵ֣יחַwĕrêaḥveh-RAY-ak
נ֔וּרnûrnoor
לָ֥אlāʾla
עֲדָ֖תʿădātuh-DAHT
בְּהֽוֹן׃bĕhônbeh-HONE

இணை வசனம்

Hebrews 11:34
அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.

Isaiah 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

Acts 27:34
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.

Luke 21:17
என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

Matthew 10:30
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

Daniel 3:2
பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

Isaiah 26:11
கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

2 Kings 19:19
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

Acts 26:26
இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.

Acts 2:6
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

Daniel 3:21
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.

Psalm 96:7
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

Psalm 83:18
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

1 Samuel 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்.


Tags தேசாதிபதிகளும் அதிகாரிகளும் தலைவரும் ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும் அவர்களுடைய தலைமயிர் கருகாமலும் அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும் அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்
தானியேல் 3:27 Concordance தானியேல் 3:27 Interlinear தானியேல் 3:27 Image