2 தீமோத்தேயு 4

fullscreen1 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

fullscreen2 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

fullscreen3 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

fullscreen4 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

fullscreen5 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

fullscreen6 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

fullscreen7 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

fullscreen8 நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

fullscreen9 ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

fullscreen10 லுூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

fullscreen11 தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

fullscreen12 துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

fullscreen13 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

fullscreen14 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

fullscreen15 நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

fullscreen16 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

fullscreen17 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

fullscreen18 பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

fullscreen19 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

fullscreen20 மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.

fullscreen21 ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதாரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

fullscreen22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

Cross Reference

ମାଥିଉଲିଖିତ ସୁସମାଚାର 12:46
ଯୀଶୁ ଯେତବେେଳେ ଏହି ସବୁ କଥା ସଠାେରେ ଜମା ରୋଇଥିବା ଲୋକମାନଙ୍କୁ କହୁଥିଲେ, ସେତବେେଳେ ତାହାଙ୍କ ମାଆ ଏବଂ ଭାଇ ଆସି ବାହା ରେ ଠିଆ ହେଲେ। ସମାନେେ ଯୀଶୁଙ୍କ ସାଙ୍ଗ ରେ କଥାବାର୍ତ୍ତା କରିବା ପାଇଁ ଗ୍ଭହୁଁଥିଲେ।

ମାଥିଉଲିଖିତ ସୁସମାଚାର 11:6
ଯେଉଁ ଲୋକ ମାେତେ ଗ୍ରହଣ କରେ, ସେ ଧନ୍ଯ।

ଯୋହନଲିଖିତ ସୁସମାଚାର 6:42
ଯିହୂଦୀମାନେ କହିଲେ, ଏ ଯୀଶୁ ଅଟନ୍ତି। ଆମ୍ଭେ ତାହାଙ୍କ ପିତା ମାତାଙ୍କୁ ଜାଣିଛୁ। ଯୀଶୁ କବଳେ ୟୋ ସଫଙ୍କେର ପୁତ୍ର। ' ସେ କିପରି ସ୍ବର୍ଗରୁ ଓହ୍ଲାଇଛି ବୋଲି କହୁଛି?'

ଗାଲାତୀୟ ମଣ୍ଡଳୀ ନିକଟକୁ ପ୍ରେରିତ ପାଉଲଙ୍କ ପତ୍ର 1:19
ପିତରଙ୍କ ସହିତ ମୁଁ ପନ୍ଦର ଦିନ ରହିଲି। ମୁଁ ସଠାରୁେ ପ୍ରଭୁଙ୍କ ଭାଇ ଯାକୁବଙ୍କ ଛଡ଼ା ଆଉ କୌଣସି ପ୍ ରରେିତଙ୍କୁ ଦଖାେ କଲି ନାହିଁ।

ମାର୍କଲିଖିତ ସୁସମାଚାର 15:40
କେତକେ ସ୍ତ୍ରୀଲୋକ କୃଶଠାରୁ କିଛି ଦୂର ରେ ଠିଆ ହାଇେ ଦେଖୁଥିଲେ। ସମାନଙ୍କେ ମଧିଅରେ ମଗ୍ଦଲୀନ ସହରରୁ ଆସିଥିବା ମରିୟମ, ଶ ଲୋମୀ, ଯାକୁବ ଓ ୟୋସିଙ୍କ ମାଆ ମରିୟମ ଥିଲେ। ଯାକୁବ ମରିୟମଙ୍କର ସାନ ପୁଅ ଥିଲା।

ଯିହୂଦାଙ୍କ ପତ୍ର 1:1
ମୁଁ ୟିହୂଦା, ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଜଣେ ସବେକ ଓ ଯାକୁବଙ୍କର ଭାଇ ଅଟେ।

ପିତରଙ୍କ ପ୍ରଥମ ପତ୍ 2:4
ପ୍ରଭୁ ଯୀଶୁ ହେଉଛନ୍ତି ଜୀବନ୍ତ ପଥର। ଜଗତର ଲୋକମାନେ ସହେି ପଥରଟି ଅଗ୍ରାହ୍ଯ କଲେ। କିନ୍ତୁ ପରମେଶ୍ବର ସହେି ପଥରଟିକୁ ମନୋନୀତ କରିଛନ୍ତି। ପରମେଶ୍ବରଙ୍କ ପାଇଁ ତାହାଙ୍କ ମୂଲ୍ଯ ଅଧିକ।

କରିନ୍ଥୀୟ ମଣ୍ଡଳୀ ନିକଟକୁ ପାଉଲଙ୍କ ପ୍ରଥମ ପତ୍ର 9:4
ଆମ୍ଭର ଖାଇବା ଓ ପିଇବା ପାଇଁ କ'ଣ ଅଧିକାର ନାହିଁ ?

କରିନ୍ଥୀୟ ମଣ୍ଡଳୀ ନିକଟକୁ ପାଉଲଙ୍କ ପ୍ରଥମ ପତ୍ର 1:23
କିନ୍ତୁ ଆମ୍ଭେ ପ୍ରଚାର କରୁଛୁ : ଖ୍ରୀଷ୍ଟ କୃଶ ରେ ମୃତ୍ଯୁ ବରଣ କଲେ। ଏକଥା ଯିହୂଦୀମାନଙ୍କ ଲାଗି ବାଧାଜନକ ଓ ଅଣଯିହୂଦୀମାନଙ୍କ ଲାଗି ମୂର୍ଖତା ଅଟେ।

ରେରିତମାନଙ୍କ କାର୍ଯ୍ୟର ବିବରଣ 1:13
ପ୍ ରରେିତମାନେ ସଠାେରେ ପହଞ୍ଚି ଉପରମହଲାର ଏକ କଠାେରୀ ଭିତରକୁ ଗଲେ, ସଠାେରେ ସମାନେେ ରହିଲେ। ଏ ପ୍ ରରେିତମାନେ ପିତର, ଯୋହନ ଯାକୁବ, ଆନ୍ଦ୍ରିୟ, ଫିଲିପ୍ପ, ଥୋମା, ବର୍ଥଲମା, ମାଥିଉ, ଆଲଫିର ପୁତ୍ର ଯାକୁବ, ସାହସୀ ଶିମାନେ ଓ ଯାକୁବର ପୁତ୍ର ୟିହୂଦା ଥିଲେ।

ଯୋହନଲିଖିତ ସୁସମାଚାର 14:22
ତା'ପରେ ୟିହୂଦା (ଈଷ୍କରିଯୋଥ ନୁହଁନ୍ତି) ତାହାଙ୍କୁ ପଚାରିଲେ, କିନ୍ତୁ ପ୍ରଭୁ ଆପଣ କାହିଁକି ଆମଠା ରେ ନିଜକୁ ଦଖାଇବୋ ପାଇଁ ଯୋଜନା କରୁଛନ୍ତି, ସାରା ଜଗତକୁ କାହିଁକି ଦଖାେଉ ନାହାଁନ୍ତି।

ଯୋହନଲିଖିତ ସୁସମାଚାର 6:60
ଯୀଶୁଙ୍କର ଶିଷ୍ଯମାନେ ଏହି ସବୁ କଥା ଶୁଣିଲେ। ସମାନଙ୍କେ ଭିତରୁ ଅନକେ କହିଲେ, ଏ ଉପଦେଶ ଗ୍ରହଣ କରିବା କଷ୍ଟକର। ଏହି ଉପଦେଶ କିଏ ଗ୍ରହଣ କରିପାରିବ?

ଲୂକଲିଖିତ ସୁସମାଚାର 7:23
ଯେଉଁ ଲୋକ ମାେତେ ଗ୍ରହଣ କରିବ, ସେ ଧନ୍ଯ।

ଲୂକଲିଖିତ ସୁସମାଚାର 4:22
ପ୍ରେତ୍ୟକକ ଲୋକ ଯୀଶୁଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବାକୁ ଲାଗିଲେ। ଯୀଶୁଙ୍କ ମୁହଁରୁ ଯେଉଁ ସୁନ୍ଦର ବାକ୍ଯ ବାହାରି ଆସୁଥିଲା, ସେଥି ରେ ସମସ୍ତେ ବିସ୍ମିତ ହାଇେ ଯାଉଥିଲେ। ସମାନେେ କହୁଥିଲେ, ଏ କ'ଣ ୟୋ ସଫଙ୍କେ ପୁଅ ନୁହେଁ?

ଲୂକଲିଖିତ ସୁସମାଚାର 2:34
ତା'ପରେଶିମିଯୋନ ସମାନଙ୍କେୁ ଆଶୀର୍ବାଦ କଲେ ଓ ମରିୟମଙ୍କୁ କହିଲେ, ଏ ବାଳକ ୟୋଗୁଁ ଅନକେ ଯିହୂଦୀଙ୍କର ଉତ୍ଥାନ ଓ ପତନ ହବେ। ସେ ପରମେଶ୍ବରଙ୍କର ଏକ ଚିହ୍ନ ହବେେ ଓ ତାହା ଲୋକମାନେ ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ।

ମାର୍କଲିଖିତ ସୁସମାଚାର 3:18
ଆନ୍ଦ୍ରିୟ, ଫିଲିପ୍ପ, ବର୍ଥଲମି, ମାଥିଉ, ଥୋମା, ଆଲଫିଙ୍କ ପୁତ୍ର ଯାକୁବ, ଥଦ୍ଦୀୟ, କିଣାନୀୟ ବା ଉଦ୍ ଯୋଗୀ ଶିମାନେ ଜି ଲୋଟ

ମାଥିଉଲିଖିତ ସୁସମାଚାର 13:55
ଏ ତ ସହେି ବଢଇରେ ପୁଅ। ତାହାଙ୍କର ମାଆଙ୍କ ନାମ ତ ମରିୟମ, ଯାକୁବ, ଯୋଷଫେ, ଶିମାନେ ଓ ୟିହୂଦା ତ ଏହାର ଭାଇ।

ଯିଶାଇୟ 53:2
କାରଣ ସେ ତାହାଙ୍କ ଦୃଷ୍ଟି ରେ ଚାରା ତୁଲ୍ଯ ଓ ଶୁଷ୍କ ଭୂମିରେ ଉତ୍ପନ୍ନ ମୂଳତୁଲ୍ଯ ବଢ଼ିଲେ। ତାଙ୍କର ଐଶ୍ଚର୍ୟ୍ଯ କି ରୂପ, ଯାହାକୁ ଆମ୍ଭେ ଦେଖି ପାରିବା, ତାଙ୍କର ସୌନ୍ଦର୍ୟ୍ଯ ନାହିଁ, ଯାହା ଆମ୍ଭକୁ ଆକର୍ଷଣ କରିବ।

ଯିଶାଇୟ 49:7
ଯାହାକୁ ମନୁଷ୍ଯ ଅବଜ୍ଞା କରେ, ଯାହାକୁ ଦେଶୀଯ ଲୋକମାନେ ଘୃଣା କରନ୍ତି, ଯେ ଶାସକ କର୍ତ୍ତାମାନଙ୍କର ଦାସ, ତାକୁ ଇଶ୍ରାୟେଲର ମୁକ୍ତିଦାତା ଓ ତା'ର ଧର୍ମସ୍ବରୂପ ସଦାପ୍ରଭୁ ଏହି କଥା କୁହନ୍ତି। ପୁଣି ବିଶ୍ବସନୀଯ ଓ ଇଶ୍ରାୟେଲର ଧର୍ମସ୍ବରୂପ ଯେଉଁ ସଦାପ୍ରଭୁ ତୁମ୍ଭକୁ ମନୋନୀତ କରିଅଛନ୍ତି, ତାଙ୍କ ସକାେଶ ରାଜାମାନେ ତୁମ୍ଭକୁ ଦେଖିଲେ ଉଠିବେ, ଅଧିପତିମାନେ ତୁମ୍ଭକୁ ପ୍ରଣାମ କରିବେ।