அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.
கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.
said And | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Balaam | בִּלְעָם֙ | bilʿām | beel-AM |
unto the ass, | לָֽאָת֔וֹן | lāʾātôn | la-ah-TONE |
Because | כִּ֥י | kî | kee |
mocked hast thou | הִתְעַלַּ֖לְתְּ | hitʿallalĕt | heet-ah-LA-let |
me: I would | בִּ֑י | bî | bee |
were there | ל֤וּ | lû | loo |
a sword | יֶשׁ | yeš | yesh |
in mine hand, | חֶ֙רֶב֙ | ḥereb | HEH-REV |
for | בְּיָדִ֔י | bĕyādî | beh-ya-DEE |
now | כִּ֥י | kî | kee |
would I kill | עַתָּ֖ה | ʿattâ | ah-TA |
thee. | הֲרַגְתִּֽיךְ׃ | hăragtîk | huh-rahɡ-TEEK |