Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 99:1 in Tamil

Home Bible Psalm Psalm 99 Psalm 99:1

சங்கீதம் 99:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.

Tamil Indian Revised Version
கர்த்தர் ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.

Tamil Easy Reading Version
கர்த்தர் அரசர். எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ மக்களினத்தார் கலங்குவராக!␢ அவர் கெருபுகள்மீது␢ வீற்றிருக்கின்றார்;␢ மண்ணுலகம் நடுநடுங்குவதாக!⁾

Other Title
அனைத்து உலகின் அரசர்

Psalm 99Psalm 99:2

King James Version (KJV)
The LORD reigneth; let the people tremble: he sitteth between the cherubims; let the earth be moved.

American Standard Version (ASV)
Jehovah reigneth; let the peoples tremble: He sitteth `above’ the cherubim; let the earth be moved.

Bible in Basic English (BBE)
The Lord is King; let the peoples be in fear: his seat is on the winged ones; let the earth be moved.

Darby English Bible (DBY)
Jehovah reigneth: let the peoples tremble. He sitteth [between the] cherubim: let the earth be moved.

World English Bible (WEB)
Yahweh reigns! Let the peoples tremble. He sits enthroned among the cherubim. Let the earth be moved.

Young’s Literal Translation (YLT)
Jehovah hath reigned, peoples tremble, The Inhabitant of the cherubs, the earth shaketh.

சங்கீதம் Psalm 99:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக.
The LORD reigneth; let the people tremble: he sitteth between the cherubims; let the earth be moved.

יְהוָ֣הyĕhwâyeh-VA
מָ֭לָךְmālokMA-loke
יִרְגְּז֣וּyirgĕzûyeer-ɡeh-ZOO
עַמִּ֑יםʿammîmah-MEEM
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
כְּ֝רוּבִ֗יםkĕrûbîmKEH-roo-VEEM
תָּנ֥וּטtānûṭta-NOOT
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

சங்கீதம் 97:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.

சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

யாத்திராகமம் 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.

ஏசாயா 24:19
தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.

சங்கீதம் 93:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

லுூக்கா 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

லுூக்கா 19:27
அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்

பிலிப்பியர் 2:12
ஆதலால், எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:14
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.

வெளிப்படுத்தின விசேஷம் 11:17
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

லுூக்கா 19:12
பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.

எசேக்கியேல் 10:1
இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

எரேமியா 50:46
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

சங்கீதம் 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.

சங்கீதம் 21:8
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

சங்கீதம் 82:5
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

சங்கீதம் 96:10
கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.

சங்கீதம் 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.

ஏசாயா 19:14
கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள்.

எரேமியா 4:24
பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.

எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

எரேமியா 49:21
அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.

சங்கீதம் 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.


Tags கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் ஜனங்கள் தத்தளிப்பார்களாக அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார் பூமி அசைவதாக
Psalm 99:1 in Tamil Concordance Psalm 99:1 in Tamil Interlinear Psalm 99:1 in Tamil Image