Psalm 77 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽கடவுளை நோக்கி␢ உரத்த குரலில் மன்றாடுகின்றேன்;␢ கடவுள் எனக்குச்␢ செவிசாய்த்தருள வேண்டுமென்று␢ அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.⁾2 ⁽என் துன்ப நாளில்␢ என் தலைவரை நாடினேன்;␢ இரவில் அயராது கைகூப்பினேன்;␢ ஆனாலும் என் ஆன்மா␢ ஆறுதல் அடையவில்லை.⁾3 ⁽கடவுளை நினைத்தேன்;␢ பெருமூச்சு விட்டேன்;␢ அவரைப்பற்றி சிந்தித்தேன்;␢ என் மனம் சோர்வுற்றது. (சேலா)⁾4 ⁽என் கண் இமைகள்␢ மூடாதபடி செய்துவிட்டீர்;␢ நான் கலக்கமுற்றிருக்கிறேன்;␢ என்னால் பேச இயலவில்லை.⁾5 ⁽கடந்த நாள்களை␢ நினைத்துப் பார்க்கின்றேன்;␢ முற்கால ஆண்டுகளைப்பற்றிச்␢ சிந்திக்கின்றேன்.⁾6 ⁽இரவில் என் பாடலைப்பற்றி␢ நினைத்துப் பார்த்தேன்;␢ என் இதயத்தில் சிந்தித்தேன்;␢ என் மனம் ஆய்வு செய்தது;⁾7 ⁽‘என் தலைவர் என்றென்றும்␢ கைவிட்டுவிடுவாரோ?␢ இனி ஒருபோதும் ஆதரவளிக்க␢ மாட்டாரோ?⁾8 ⁽அவரது பேரன்பு␢ முற்றிலும் மறைந்துவிடுமோ?␢ அவரது வாக்குறுதி தலைமுறைதோறும்␢ அற்றுப்போய்விடுமோ?⁾9 ⁽கடவுள் இரக்கங்காட்ட␢ மறந்துவிட்டாரோ? அல்லது␢ சினங்கொண்டு தமது இரக்கத்தை␢ நிறுத்திவிட்டாரோ?’ (சேலா)⁾10 ⁽அப்பொழுது நான்,␢ ‘உன்னதரின் வலக்கை␢ மாறுபட்டுச் செயலாற்றுவது␢ என்னை வருத்துகின்றது’ என்றேன்.⁾11 ⁽ஆண்டவரே, உம் செயல்களை␢ என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;␢ முற்காலத்தில் நீர் செய்த␢ வியத்தகு செயல்களை␢ நினைத்துப் பார்ப்பேன்.⁾12 ⁽உம் செயல்கள் அனைத்தையும் பற்றித்␢ தியானிப்பேன்!␢ உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச்␢ சிந்திப்பேன்.⁾13 ⁽கடவுளே, உமது வழி தூய்மையானது!␢ மாபெரும் நம் கடவுளுக்கு␢ நிகரான இறைவன் யார்!⁾14 ⁽அரியன செய்யும்␢ இறைவன் நீர் ஒருவரே!␢ மக்களினங்களிடையே உமது ஆற்றலை␢ விளங்கச் செய்தவரும் நீரே;⁾15 ⁽யாக்கோபு, யோசேப்பு␢ என்போரின் புதல்வரான␢ உம் மக்களை நீர் உமது புயத்தால்␢ மீட்டுக் கொண்டீர். (சேலா)⁾16 ⁽கடவுளே,␢ வெள்ளம் உம்மைப் பார்த்தது;␢ வெள்ளம் உம்மைப் பார்த்து␢ நடுக்கமுற்றது;␢ ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.⁾17 ⁽கார்முகில்கள் மழை பொழிந்தன;␢ மேகங்கள் இடிமுழங்கின;␢ உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.⁾18 ⁽உமது இடிமுழக்கம்␢ கடும்புயலில் ஒலித்தது;␢ மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின;␢ மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.⁾19 ⁽கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்;␢ வெள்ளத்திரளிடையே␢ உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;␢ ஆயினும் உம் அடிச்சுவடுகள்␢ எவருக்கும் புலப்படவில்லை.⁾20 ⁽மோசே, ஆரோன்␢ ஆகியோரைக் கொண்டு␢ உம் மக்களை␢ மந்தையென அழைத்துச் சென்றீர்.⁾