Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 62:2 in Tamil

Home Bible Psalm Psalm 62 Psalm 62:2

சங்கீதம் 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

Tamil Indian Revised Version
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.

Tamil Easy Reading Version
எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.

Thiru Viviliam
⁽உண்மையாகவே என் கற்பாறையும்␢ மீட்பும் அவரே;␢ என் கோட்டையும் அவரே;␢ எனவே நான் சிறிதும் அசைவுறேன்.⁾

Psalm 62:1Psalm 62Psalm 62:3

King James Version (KJV)
He only is my rock and my salvation; he is my defence; I shall not be greatly moved.

American Standard Version (ASV)
He only is my rock and my salvation: `He is’ my high tower; I shall not be greatly moved.

Bible in Basic English (BBE)
He only is my Rock and my salvation; he is my high tower; I will not be greatly moved.

Darby English Bible (DBY)
He only is my rock and my salvation; my high fortress: I shall not be greatly moved.

Webster’s Bible (WBT)
To the chief Musician, to Jeduthun, A Psalm of David. Truly my soul waiteth upon God: from him cometh my salvation.

World English Bible (WEB)
He alone is my rock and my salvation, my fortress– I will never be greatly shaken.

Young’s Literal Translation (YLT)
Only — He `is’ my rock, and my salvation, My tower, I am not much moved.

சங்கீதம் Psalm 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.
He only is my rock and my salvation; he is my defence; I shall not be greatly moved.

אַךְʾakak
ה֣וּאhûʾhoo
צ֭וּרִיṣûrîTSOO-ree
וִֽישׁוּעָתִ֑יwîšûʿātîvee-shoo-ah-TEE
מִ֝שְׂגַּבִּ֗יmiśgabbîMEES-ɡa-BEE
לֹאlōʾloh
אֶמּ֥וֹטʾemmôṭEH-mote
רַבָּֽה׃rabbâra-BA

Cross Reference

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 59:17
என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 4:8
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

1 கொரிந்தியர் 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

மீகா 7:8
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

ஏசாயா 32:2
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

சங்கீதம் 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

சங்கீதம் 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

சங்கீதம் 59:9
அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.

சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

சங்கீதம் 27:1
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?

உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

சங்கீதம் 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!


Tags அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் உயர்ந்த அடைக்கலமுமானவர் நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை
Psalm 62:2 in Tamil Concordance Psalm 62:2 in Tamil Interlinear Psalm 62:2 in Tamil Image