1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.Be merciful unto me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.
2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.Mine enemies would daily swallow me up: for they be many that fight against me, O thou most High.
3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.What time I am afraid, I will trust in thee.
4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.
5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.Every day they wrest my words: all their thoughts are against me for evil.
6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.They gather themselves together, they hide themselves, they mark my steps, when they wait for my soul.
7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.Shall they escape by iniquity? in thine anger cast down the people, O God.
8என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?Thou tellest my wanderings: put thou my tears into thy bottle: are they not in thy book?
9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.When I cry unto thee, then shall mine enemies turn back: this I know; for God is for me.
10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.In God will I praise his word: in the LORD will I praise his word.
11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?In God have I put my trust: I will not be afraid what man can do unto me.
12தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.Thy vows are upon me, O God: I will render praises unto thee.
13நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?For thou hast delivered my soul from death: wilt not thou deliver my feet from falling, that I may walk before God in the light of the living?
1Thaevanae, enakku irangum; manushan ennai vilungappaarkkiraan, naalthoraுm porseythu ennai odukkukiraan.Be merciful unto me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.
2En saththurukkal naalthoraுm ennai vilungappaarkkiraarkal: unnathamaanavarae, enakku virothamaay akangariththup por seykiravarkal anaekar.Mine enemies would daily swallow me up: for they be many that fight against me, O thou most High.
3Naan payappadukira naalil ummai nampuvaen.What time I am afraid, I will trust in thee.
4Thaevanai munnittu avarutaiya vaarththaiyaip pukaluvaen; thaevanai nampiyirukkiraேn, naan payappataen; maamsamaanavan enakku enna seyvaan?In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.
5Niththamum en vaarththaikalaip purattukiraarkal; enakkuth theenguseyvathae avarkal mulu ennnamaayirukkirathu.Every day they wrest my words: all their thoughts are against me for evil.
6Avarkal aekamaayk kooti, pathivirukkiraarkal; en piraananai vaanga virumpi, en kaalatikalaith thodarnthu varukiraarkal.They gather themselves together, they hide themselves, they mark my steps, when they wait for my soul.
7Avarkal thangal akkiramaththinaal thappuvaarkalo? Thaevanae, kopangaொnndu janangalaik geelae thallum.Shall they escape by iniquity? in thine anger cast down the people, O God.
8En alaichchalkalai thaevareer ennnniyirukkireer ; en kannnneerai ummutaiya thuruththiyil vaiyum; avaikal ummutaiya kanakkil allavo eluthiyirukkirathu?Thou tellest my wanderings: put thou my tears into thy bottle: are they not in thy book?
9Naan ummai Nnokkik kooppidum naalil en saththurukkal pinnittuth thirumpuvaarkal; Dhevan en patchaththil irukkiraar enpathai arivaen.When I cry unto thee, then shall mine enemies turn back: this I know; for God is for me.
10Thaevanai munnittu avarutaiya vaarththaiyaip pukaluvaen; karththarai munnittu avarutaiya vaarththaiyaip pukaluvaen.In God will I praise his word: in the LORD will I praise his word.
11Thaevanai nampiyirukkiraேn, naan payappataen; manushan enakku ennaseyvaan?In God have I put my trust: I will not be afraid what man can do unto me.
12Thaevanae, naan umakkup pannnnina poruththanaikal enmael irukkirathu; umakku sthoththirangalaich seluththuvaen.Thy vows are upon me, O God: I will render praises unto thee.
13Naan thaevanukku munpaaka jeevanullorutaiya velichchaththilae nadakkumpati, neer en aaththumaavai maranaththukkum en kaalkalai idaralukkum thappuviyaathiruppeero?For thou hast delivered my soul from death: wilt not thou deliver my feet from falling, that I may walk before God in the light of the living?