Psalm 48 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽ஆண்டவர் மாண்பு மிக்கவர்;␢ நம் கடவுளின் நகரில்,␢ அவரது திருமலையில்␢ மிகுந்த புகழுக்கு உரியவர்.⁾2 ⁽அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும்␢ சீயோன் மலை அனைத்து உலகிற்கும்␢ மகிழ்ச்சியால் இலங்குகின்றது;␢ மாவேந்தரின் நகரும் அதுவே.⁾3 ⁽அதன் அரண்மனைகளில்␢ கடவுள் வீற்றிருந்து, தம்மையே␢ அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.⁾4 ⁽இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;␢ அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;⁾5 ⁽அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;␢ திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.⁾6 ⁽அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்போல்␢ அவர்கள் துடிதுடித்தனர்.⁾7 ⁽தர்சீசுக் கப்பல்களைக்␢ கீழைக் காற்றினால்␢ நீர் தகர்த்தெறிகின்றீர்.⁾8 ⁽கேள்விப்பட்டவாறே␢ நேரில் யாம் கண்டோம்;␢ படைகளின் ஆண்டவரது நகரில்,␢ ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;␢ கடவுள் அந்நகரை எந்நாளும்␢ நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)⁾9 ⁽கடவுளே! உமது கோவிலின் நடுவில்␢ உம் பேரன்பை நினைந்து உருகினோம்.⁾10 ⁽கடவுளே! உமது பெயரைப் போலவே,␢ உமது புகழும் பூவுலகின்␢ கடை எல்லைவரை எட்டுகின்றது;␢ உமது வலக்கை␢ நீதியை நிலைநாட்டுகின்றது.⁾11 ⁽சீயோன் மலை மகிழ்வதாக!␢ யூதாவின் நகர்கள்␢ உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு␢ அக்களிப்பனவாக!⁾12 ⁽சீயோனை வலம் வாருங்கள்;␢ அதைச்சுற்றி நடைபோடுங்கள்;␢ அதன் காவல் மாடங்களை␢ எண்ணிக்கையிடுங்கள்.⁾13 ⁽அதன் மதில்களைக்␢ கவனித்துப் பாருங்கள்;␢ அதன் கோட்டைகளைச்␢ சுற்றிப் பாருங்கள்;␢ அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு␢ இதை உங்களால் விவரிக்க இயலும்.⁾14 ⁽இத்தகைய கடவுளே என்றென்றும்␢ நம் கடவுள்; அவரே நம்மை␢ இறுதிவரை வழி நடத்துவார்.⁾