Psalm 34 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽ஆண்டவரை நான்␢ எக்காலமும் போற்றுவேன்;␢ அவரது புகழ் எப்பொழுதும்␢ என் நாவில் ஒலிக்கும்.⁾2 ⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾3 ⁽என்னுடன் ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ அவரது பெயரை ஒருமிக்க␢ மேன்மைப்படுத்துவோம்.⁾4 ⁽துணைவேண்டி நான் ஆண்டவரை␢ மன்றாடினேன்; அவர் எனக்கு␢ மறுமொழி பகர்ந்தார்;␢ எல்லா வகையான அச்சத்தினின்றும்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾5 ⁽அவரை நோக்கிப் பார்த்தோர்␢ மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;␢ அவர்கள் முகம்␢ அவமானத்திற்கு உள்ளாகவில்லை.⁾6 ⁽இந்த ஏழை கூவியழைத்தான்;␢ ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;␢ அவர் எல்லா நெருக்கடியினின்றும்␢ அவனை விடுவித்துக் காத்தார்.⁾7 ⁽ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை␢ அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.⁾8 ⁽ஆண்டவர் எத்துணை இனியவர் என்று␢ சுவைத்துப் பாருங்கள்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ பேறுபெற்றோர்.⁾9 ⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾10 ⁽சிங்கக் குட்டிகள் உணவின்றிப்␢ பட்டினி இருக்க நேரிட்டாலும்,␢ ஆண்டவரை நாடுவோர்க்கு␢ நன்மை ஏதும் குறையாது.⁾11 ⁽வாரீர் பிள்ளைகளே!␢ நான் சொல்வதைக் கேளீர்!␢ ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி␢ உங்களுக்குக் கற்பிப்பேன்.⁾12 ⁽வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?␢ வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு␢ நெடுநாள் வாழ நாட்டமா?⁾13 ⁽அப்படியெனில், தீச்சொல்லினின்று␢ உன் நாவைக் காத்திடு;␢ வஞ்சக மொழியை␢ உன் வாயைவிட்டு விலக்கிடு!⁾14 ⁽தீமையைவிட்டு விலகு;␢ நன்மையே செய்; நல்வாழ்வை நாடு;␢ அதை அடைவதிலேயே கருத்தாயிரு.⁾15 ⁽ஆண்டவர் கண்கள்␢ நீதிமான்களை நோக்குகின்றன;␢ அவர் செவிகள்␢ அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.⁾16 ⁽ஆண்டவரின் முகமோ␢ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;␢ அவர், அவர்களின் நினைவே␢ உலகில் அற்றுப்போகச் செய்வார்.⁾17 ⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾18 ⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾19 ⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾20 ⁽அவர்களின் எலும்புகளை எல்லாம்␢ அவர் பாதுகாக்கின்றார்;␢ அவற்றுள் ஒன்றும் முறிபடாது.⁾21 ⁽தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;␢ நேர்மையாளரை வெறுப்போர்␢ தண்டனை பெறுவர்.⁾22 ⁽ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை␢ மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம்␢ புகும் எவரும் தண்டனை அடையார்.⁾