Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 22:1 in Tamil

Home Bible Psalm Psalm 22 Psalm 22:1

சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?

Tamil Indian Revised Version
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?

Tamil Easy Reading Version
என் தேவனே, என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர் உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்!

Thiru Viviliam
⁽என் இறைவா, என் இறைவா,␢ ஏன் என்னைக் கைவிட்டீர்?␢ என்னைக் காப்பாற்றாமலும்,␢ நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்␢ ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?⁾

Title
“உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

Other Title
துயர்மிகு புலம்பல்§(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

Psalm 22Psalm 22:2

King James Version (KJV)
My God, my God, why hast thou forsaken me? why art thou so far from helping me, and from the words of my roaring?

American Standard Version (ASV)
My God, my God, why hast thou forsaken me? `Why art thou so’ far from helping me, `and from’ the words of my groaning?

Bible in Basic English (BBE)
<To the chief music-maker on Aijeleth-hash-shahar. A Psalm. Of David.> My God, my God, why are you turned away from me? why are you so far from helping me, and from the words of my crying?

Darby English Bible (DBY)
{To the chief Musician. Upon Aijeleth-Shahar. A Psalm of David.} My ùGod, my ùGod, why hast thou forsaken me? [why art thou] far from my salvation, from the words of my groaning?

World English Bible (WEB)
> My God, my God, why have you forsaken me? Why are you so far from helping me, and from the words of my groaning?

Young’s Literal Translation (YLT)
To the Overseer, on `The Hind of the Morning.’ — A Psalm of David. My God, my God, why hast Thou forsaken me? Far from my salvation, The words of my roaring?

சங்கீதம் Psalm 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
My God, my God, why hast thou forsaken me? why art thou so far from helping me, and from the words of my roaring?

אֵלִ֣יʾēlîay-LEE
אֵ֭לִיʾēlîA-lee
לָמָ֣הlāmâla-MA
עֲזַבְתָּ֑נִיʿăzabtānîuh-zahv-TA-nee
רָח֥וֹקrāḥôqra-HOKE
מִֽ֝ישׁוּעָתִ֗יmîšûʿātîMEE-shoo-ah-TEE
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
שַׁאֲגָתִֽי׃šaʾăgātîsha-uh-ɡa-TEE

Cross Reference

மாற்கு 15:34
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு 27:46
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

சங்கீதம் 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

சங்கீதம் 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

யோபு 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.

எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

ஏசாயா 59:11
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

சங்கீதம் 26:9
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.

சங்கீதம் 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

சங்கீதம் 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

லுூக்கா 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

1 சாமுவேல் 12:22
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

ஏசாயா 46:13
என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.

சங்கீதம் 71:11
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

சங்கீதம் 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

சங்கீதம் 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

சங்கீதம் 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.

சங்கீதம் 16:1
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.


Tags என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் எனக்கு உதவி செய்யாமலும் நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்
Psalm 22:1 in Tamil Concordance Psalm 22:1 in Tamil Interlinear Psalm 22:1 in Tamil Image