சங்கீதம் 18:41
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
Tamil Indian Revised Version
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் உதவி வேண்டினார்கள். அவர்களைக் காப்பவர் எவருமில்லை. கர்த்தரை நோக்கி முறையிட்டனர், அவர் பதிலளிக்கவில்லை.
Thiru Viviliam
⁽உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு உதவுவார்␢ யாருமில்லை. அவர்கள்␢ ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு␢ அவர் பதிலளிக்கவில்லை.⁾
King James Version (KJV)
They cried, but there was none to save them: even unto the LORD, but he answered them not.
American Standard Version (ASV)
They cried, but there was none to save; Even unto Jehovah, but he answered them not.
Bible in Basic English (BBE)
They were crying out, but there was no one to come to their help: even to the Lord, but he gave them no answer.
Darby English Bible (DBY)
They cried, and there was none to save; — unto Jehovah, and he answered them not.
Webster’s Bible (WBT)
Thou hast also given me the necks of my enemies; that I might destroy them that hate me.
World English Bible (WEB)
They cried, but there was none to save; Even to Yahweh, but he didn’t answer them.
Young’s Literal Translation (YLT)
They cry, and there is no saviour, On Jehovah, and He doth not answer them.
சங்கீதம் Psalm 18:41
அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
They cried, but there was none to save them: even unto the LORD, but he answered them not.
| יְשַׁוְּע֥וּ | yĕšawwĕʿû | yeh-sha-weh-OO | |
| וְאֵין | wĕʾên | veh-ANE | |
| מוֹשִׁ֑יעַ | môšîaʿ | moh-SHEE-ah | |
| עַל | ʿal | al | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| עָנָֽם׃ | ʿānām | ah-NAHM |
Cross Reference
நீதிமொழிகள் 1:28
அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
யோபு 27:9
ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
லுூக்கா 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
சகரியா 7:13
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மீகா 3:4
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
ஓசியா 7:14
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
எசேக்கியேல் 8:18
ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.
எரேமியா 14:12
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.
எரேமியா 11:11
ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
ஏசாயா 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
சங்கீதம் 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
யோபு 35:12
அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரே மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
2 சாமுவேல் 22:42
அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
Tags அவர்கள் கூப்பிடுகிறார்கள் அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை
Psalm 18:41 in Tamil Concordance Psalm 18:41 in Tamil Interlinear Psalm 18:41 in Tamil Image