Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 17:1 in Tamil

Home Bible Psalm Psalm 17 Psalm 17:1

சங்கீதம் 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Tamil Indian Revised Version
தாவீதின் ஜெபம் கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும். எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும். எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, என் வழக்கின்␢ நியாயத்தைக் கேட்டருளும்;␢ என் வேண்டுதலை உற்றுக் கேளும்;␢ வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்␢ என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.⁾

Title
தாவீதின் ஒரு ஜெபம்

Other Title
மாசற்றவனின் மன்றாட்டு§(தாவீதின் மன்றாட்டு)

Psalm 17Psalm 17:2

King James Version (KJV)
Hear the right, O LORD, attend unto my cry, give ear unto my prayer, that goeth not out of feigned lips.

American Standard Version (ASV)
Hear the right, O Jehovah, attend unto my cry; Give ear unto my prayer, that goeth not out of feigned lips.

Bible in Basic English (BBE)
<A Prayer. Of David.> Let my cause come to your ears, O Lord, give attention to my cry; give ear to my prayer which goes not out from false lips.

Darby English Bible (DBY)
{A Prayer of David.} Hear the right, O Jehovah, attend unto my cry; give ear unto my prayer, which is not out of feigned lips.

Webster’s Bible (WBT)
A Prayer of David. Hear the right, O LORD, attend to my cry, give ear to my prayer, that goeth not out of feigned lips.

World English Bible (WEB)
> Hear, Yahweh, my righteous plea; Give ear to my prayer, that doesn’t go out of deceitful lips.

Young’s Literal Translation (YLT)
A Prayer of David. Hear, O Jehovah, righteousness, attend my cry, Give ear `to’ my prayer, without lips of deceit.

சங்கீதம் Psalm 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
Hear the right, O LORD, attend unto my cry, give ear unto my prayer, that goeth not out of feigned lips.

שִׁמְעָ֤הšimʿâsheem-AH
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
צֶ֗דֶקṣedeqTSEH-dek
הַקְשִׁ֥יבָהhaqšîbâhahk-SHEE-va
רִנָּתִ֗יrinnātîree-na-TEE
הַאֲזִ֥ינָהhaʾăzînâha-uh-ZEE-na
תְפִלָּתִ֑יtĕpillātîteh-fee-la-TEE
בְּ֝לֹ֗אbĕlōʾBEH-LOH
שִׂפְתֵ֥יśiptêseef-TAY
מִרְמָֽה׃mirmâmeer-MA

Cross Reference

சங்கீதம் 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

சங்கீதம் 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

சங்கீதம் 86:1
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

ஏசாயா 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

எரேமியா 3:10
இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தானியேல் 9:18
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

மத்தேயு 15:8
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

யோவான் 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

1 யோவான் 3:21
பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,

சங்கீதம் 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

சங்கீதம் 142:1
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.

நெகேமியா 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.

சங்கீதம் 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

சங்கீதம் 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.

சங்கீதம் 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

சங்கீதம் 55:2
எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும் சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.

சங்கீதம் 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

2 நாளாகமம் 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.


Tags கர்த்தாவே நியாயத்தைக் கேட்டருளும் என் கூப்பிடுதலைக் கவனியும் கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்
Psalm 17:1 in Tamil Concordance Psalm 17:1 in Tamil Interlinear Psalm 17:1 in Tamil Image