யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாகவந்து, அவர்களை நோக்கி:
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே.
இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே.
இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.
எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
So shall not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
remove the | תִסֹּ֤ב | tissōb | tee-SOVE |
inheritance of the | נַֽחֲלָה֙ | naḥălāh | na-huh-LA |
children Israel | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
from tribe | מִמַּטֶּ֖ה | mimmaṭṭe | mee-ma-TEH |
to | אֶל | ʾel | el |
tribe: | מַטֶּ֑ה | maṭṭe | ma-TEH |
for | כִּ֣י | kî | kee |
one every | אִ֗ישׁ | ʾîš | eesh |
inheritance the to | בְּנַֽחֲלַת֙ | bĕnaḥălat | beh-na-huh-LAHT |
himself tribe | מַטֵּ֣ה | maṭṭē | ma-TAY |
the of | אֲבֹתָ֔יו | ʾăbōtāyw | uh-voh-TAV |
fathers. his of shall | יִדְבְּק֖וּ | yidbĕqû | yeed-beh-KOO |
keep of the | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
children of Israel | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |